விமர்சனங்கள் எப்படி வந்தால் என்ன?... வசூலில் ரூ. 100 கோடியை தொட்ட பராசக்தி
பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வந்த பராசக்தி திரைப்படம், வெறும் படமாக மட்டுமல்லாமல் ஒரு வரலாற்று ஆவணமாகப் பார்க்கப்படுகிறது. 1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவான இத்திரைப்படம், தற்போது உலகளாவிய பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வசூல் சாதனையைப் படைத்து வருகிறது.
பராசக்தியை பொறுத்தவரை கலவையான விமர்சனங்களையே பெற்றது. தமிழகத்தை பொறுத்தவரை படம் வெளியாகி ஒரு நாளிலேயே வசூல் மந்தமாக தொடங்கியது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறினாலும் ஜனநாயகனுடன் போட்டி குறித்து ஏற்பட்ட பிரச்சனை காரணமாக விஜய் ரசிகர்கள் நெகடிவ் விமர்சனங்களை பரப்பினார்கள் என படக்குழுவினர் குற்றம் சாட்டினர்.
இந்த நிலையில் பராசக்தி உலகளவில் 100 கோடி ருபாய் வசூலை ஈட்டியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இது குறித்து அதிகாரபூரவாக படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். இது சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக அமெரிக்கா, மலேசியா போன்ற வெளிநாடுகளில் சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களை விட இந்தப் படத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் பண்டிகையை…
ஜனநாயகன் திரைப்படம்…
தமிழ் சினிமாவின்…
ஐயா திரைப்படம்…
நடிகர் அஜித்துக்கு…