பராசக்தி படத்தில் சிவாஜியுடன் ஒரு முக்கிய பிரபலமும் நடித்திருக்கிறார் என்ற முக்கிய தகவல்கள் உங்களுக்காக.
ஏ.வி.எம் மெய்யப்ப செட்டியாரும், பி.ஏ.பெருமாள் இணைந்து ஒரு படத்தினை தயாரிக்க முடிவெடுக்கப்பட்டது. அப்போது, பிரபலமாக இருந்த பராசக்தி நாடகத்தினை படமாக்கலாம் எனத் திட்டமிட்டனர். இயக்குனர்கள் கிருஷ்ணன் – பஞ்சு இயக்க மு.கருணாநிதி வசனம் எழுதினார்.

அந்த சமயத்தில், இந்த நாடகத்தில் பிரபலமாக நடித்து கொண்டிருந்த சிவாஜியை இதில் நடிக்க வைக்கலாம் என்பது பி.ஏ.பெருமாளின் எண்ணமாக இருந்தது. ஆனால்,மெய்யப்ப செட்டியாரோ அச்சமயம் சினிமாவில் புகழ்பெற்று இருந்த கே.ஆர்.ராமசாமி தான் என திட்டவட்டமாக இருந்தார்.
இத்துணை சொல்லிக்கூட பெருமாள் முதலியார் சிவாஜி தான் வேண்டும் என அடம்பிடித்தார். இவரை ஒன்னும் செய்ய முடியாது. பட்டு திருந்தட்டும் என ஏவிஎம் நிறுவனம் பராசக்தி படத்திற்கு சிவாஜியையே கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தது. ஆனால் பிரச்சனை அங்கு முடிந்து விடவில்லை. படம் முடியும் வரை சிவாஜியினை நடிக்க வைக்க பலரும் மறுப்பு தெரிவித்ததே நடந்தது.

கடைசியில் பராசக்தி மிகப்பெரிய வெற்றியினை பெற்ற பிறகே அனைவரது நம்பிக்கையை உடைத்தார். தானும் ஒரு நடிகன் தான் என்பதை நிரூபித்தார். இந்நிலையில், வந்த கோர்ட் காட்சிகளில் சிலவற்றில் கவிஞர் கண்ணதாசனும் நடித்திருக்கிறார். அப்படத்தில் பாடல் எழுத ஆசைப்பட்டவர் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




