சிவாஜியின் முதல் திரைப்படம் ‘பராசக்தி’ இல்லை!.. அட இது தெரியாம போச்சே!...

by சிவா |
sivaji
X

sivaji

தமிழ் சினிமாவில் நடிப்பிற்கு இலக்கணமாக இருப்பவர் செவாலியர் சிவாஜி கணேசன். கருப்பு வெள்ளை துவங்கி கலர் வரை முந்நூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர். கடவுள்களையும், சரித்திர கதாபாத்திரங்களையும் கண் முன் நிறுத்தியவர். இவரின் நடிப்பு பாதிப்பு இல்லாமல் ஒரு நடிகரும் இருக்க முடியாது. திரையுலகம் இப்போது இவரை நடிப்புக்கு ஆசானாகவே பார்க்கிறது.

sivaji

இவரின் நிஜப்பெயர் கணேசன். நடிப்பின் மீது இருந்த ஆசையில் நாடகங்களில் நடித்து வந்தார். வீர சிவாஜி வேடத்தில் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியதால் இவரின் பெயரின் முன்பு சிவாஜி சேர்ந்து சிவாஜி கணேசனாக மாறினார். செவாலியர் உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

தமிழில் சினிமாவில் பராசக்தி திரைப்படம் மூலம்தான் இவர் அறிமுகமானார் என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் அதில் உண்மையில்லை. நாடகத்தில் இவரின் நடிப்பு திறமையை பார்த்த பழம்பெரும் நடிகை அஞ்சலி தேவி சிவாஜியை வைத்து ‘பூங்கோதை’ என்கிற திரைப்படத்தை தயாரித்தார். அப்படத்தில் அவர் நடித்தும் இருந்தார். இதுதான் சிவாஜியின் முதல் திரைப்படம்.

poonkothai

ஆனால், இப்படத்தில் நடிக்கும் போதே சிவாஜி கணேசனுக்கு பராசக்தியில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. பராசக்தி திரைப்படம் முதலில் வெளியானதால் அதுவே அவரின் முதல் திரைப்படமாக கருதப்பட்டு வருகிறது. பராசக்தி திரைப்படம் 1952 அக்டோபர் மாதத்தில் வெளியானது. பூங்கோதை திரைப்படம் 1953ம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: மும்முரமாக நடந்துகொண்டிருந்த படப்பிடிப்பு… ஐட்டம் சாங்கிற்கு நடனமாடிய பாரதிராஜா… இவ்வளவு விளையாட்டுத்தனமாவா இருக்குறது??

Next Story