மீண்டும் மல்லுவுட் நடிகர்… பராசக்தியின் அப்டேட்டை கசிய விட்ட தயாரிப்பாளர்…

Parasakthi
Parasakthi: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி படத்தில் இணைய இருக்கும் சூப்பர் நடிகர் குறித்து தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் விஷயத்தை கசிய விட்டு இருக்கிறார்.
சூரரைப் போற்று படத்தின் வெற்றியை தொடர்ந்து சுதா கொங்கரா மற்றும் சூர்யா இருவரும் இணைய இருந்ததாக அறிவித்தனர். இதனால் மீண்டும் சூப்பர் கூட்டணி அமைய இருந்ததாக ரசிகர்கள் ஆரவாரம் கொடுத்தனர். தொடர்ந்து படத்தில் சூர்யாவுடன் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா உள்ளிட்டோர் ஒப்பந்தம் ஆகினர்.

parasakthi
படத்தின் பெயரும் புறநானூறு என அறிவிக்கப்பட்ட நிலையில் ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பை குவித்தது. ஆனால் அப்படம் அதை தொடர்ந்து நகராமல் நின்றது. சூர்யாவின் பாலிவுட் ஆசையால் அவர் நழுவி கொண்டார். அதை தொடர்ந்து சுதா கொங்கரா சிவகார்த்திகேயனுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
Also Read: வீர தீர சூரன் பட ரிலீஸில் இவ்ளோ சிக்கலா? துணிந்து இறங்கும் சீயான்
இருந்தும், சிவாஜி கணேசனின் மிகப்பெரிய சூப்பர்ஹிட் படமான பராசக்தி பெயரை எப்படி அறிவிக்கலாம் என பலரும் கிசுகிசுத்தனர். அதை தொடர்ந்து ஏவிஎம் நிறுவனம் பராசக்தி டைட்டிலை பயன்படுத்த முழு அனுமதி கொடுத்து சுதா கொங்கரா டீமை காப்பாற்றியது.

basil
இதை தொடர்ந்து படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. 2டி நிறுவனத்துக்கு பதிலாக டாவ்ன் பிக்சர்ஸ் தயாரிக்க இப்போது உள்ளே வந்துள்ளது. தற்போது கோலிவுட்டில் நிறைய படங்களை இந்நிறுவனம் தயாரித்து வருகிறது.
தற்போது இந்நிறுவனத்தின் ஆகாஷ் பாஸ்கரன் கூறுகையில், பராசக்தி படம் தொடங்கும் முன்னரே அப்படத்தின் டைட்டிலை முடிவு செய்து அதற்கான வேலைகளில் ஆரம்பித்து விட்டோம். மேலும், இப்படத்தில் மலையாள சூப்பர் ஹிட் நடிகர் பேசில் ஜோசப் இணைய இருக்கிறாராம். பராசக்தி படத்தின் முக்கிய கேரக்டராக பேசில் ஜோசப் நடிக்க இருக்கும் நிலையில் டைட்டிலை எந்த விதத்திலும் பாதிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.