Parasakthi: 2வது நாளில் காத்து வாங்கும் பராசக்தி?!.. கேப் விடாம அடிக்குறாங்களே!…

Published On: January 11, 2026
parasakthi
---Advertisement---

இந்த பொங்கலுக்கு விஜயின் ஜனநாயகன் மற்றும் சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா ஆகியோர் நடித்து சுதாகொங்கரா இயக்கியுள்ள பராசக்தி ஆகிய இரண்டு படங்களும் வெளியாகவிருந்தது. ஆனால், சென்சார் பிரச்சனையில் சிக்கியதால் ஜனநாயகன் ரிலீஸாகவில்லை.

அதற்கு முன் ஜனவரி 9 ஜனநாயகன், 10ம் தேதி பராசக்தி என அறிவித்தார்கள். இதனால் விஜயோடு சிவகார்த்திகேயன் படம் மோதுவது போல ஒரு இமேஜ் உருவானது. சில சினிமா பத்திரிக்கையாளர்கள் சிவகார்த்திகேயன் ஆசைப்படியே அந்த படம் ஜனநாயகனோடு வெளியாகிறது என சொல்ல விஜய் ரசிகர்கள் சிவகார்த்திகேயன் மீது கோபப்பட்டார்கள். பராசக்தி இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் விளக்கமளித்தும் அவர்கள் ஏற்கவில்லை.

அந்தநிலையில்தான் பராசக்தி படம் நேற்று உலகமெங்கும் வெளியானது. படம் நன்றாக இருக்கிறது.. 1960களில் தமிழக இளைஞர்கள் ஹிந்தி திணிப்பை எப்படி தங்களின் உயிரை கொடுத்து எதிர்த்தார்கள் என்பதை இப்போதுள்ள இளைஞர்கள் தெரி்ந்துகொள்ள இந்த படத்தை பார்க்கவேண்டும் என சிலர் சொன்னாலு ஒருபக்கம் ‘படம் மொக்கையாக இருக்கிறது’ என்கிற நெகட்டிவ் விமர்சனங்களும் வந்தது.

குறிப்பாக, சிவகார்த்திகேயன் மீது கோபத்தில் இருக்கும் விஜய் ரசிகர்கள் இப்படத்திற்கு எதிராக களமாடி வருகிறார்கள். அவர்கள்தான் இப்படத்திற்கு எதிரான விமர்சனத்தை பரப்பினார்கள். அதிலும், பிரின்ஸ் படம் வெளியானபோது ரசிகர்கள் அப்படத்தை திட்டிய வீடியோவை பராசக்தி படத்திற்கு என்பது போல போலியான வீடியோக்களை பரப்பினார்கள். இதன் காரணமாக, பராசக்தி படத்திற்கு படம் பார்க்க பலரும் செல்லவில்லை எனத்தெரிகிறது.

நேற்று இப்படம் தமிழகத்தில் 11.50 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில், படம் வெளியாகி 2வது நாளான இன்று தமிழகத்தின் பல தியேட்டர்களிலும் பராசக்தி காத்து வாங்குவதாக செய்திகள் பரவி வருகிறது.