துப்பாக்கி கொடுத்த விஜயையே பதம் பார்க்கும் சிவகார்த்திகேயன்.. பின்னணியில் இருக்கும் அரசியல்

by Rohini |   ( Updated:2025-03-25 08:03:24  )
siva
X

siva

நேற்று ஒரு வழியாக விஜய் நடிக்கும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார்கள். பொங்கல் ரிலீஸுக்கு அந்த படம் வர இருக்கிறது. இதற்கு மத்தியில் இன்னொரு விஷயமும் நடந்தது. தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இதே மாதிரி 2026 பொங்கல் என பதிவிட்டு தீப்பொறி ஸ்மைலி எல்லாம் போட்டு பதிவிட்டு இருந்தார். இது பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதியை குறிப்பிட்டுத்தான் அவர் கொடுத்த ஒரு சீக்ரெட் தகவலாக இருந்தது.

உடனே விஜய் ரசிகர்கள் அவருடைய பதிவை டேக் செய்து அது எப்படி விஜய்யுடன் மோத விடலாம் என்றெல்லாம் கத்தி சோசியல் மீடியாவில் சண்டை போட்டு கொண்டிருந்தனர். இன்னொரு பக்கம் ‘இனிமேல் நீங்கள் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என துப்பாக்கியை கொடுத்த விஜய்க்கு எதிராக சிவகார்த்திகேயன் வந்து நிற்பது எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்’ என விஜய் ரசிகர்கள் கோபத்தில் கொந்தளித்தனர்.

ஆனால் நடந்தது என்னவெனில் ஜனநாயகன் பட ரிலீஸ் தேதி அறிவிப்புக்கு முன்னதாகவே அதாவது ஒரு வார காலத்திற்கு முன்னதாகவே ஆகாஷ் பாஸ்கரன் ஆனந்த விகடன் பேட்டியில் பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி பொங்கல் என்றுதான் சொல்லி இருந்தார். எனவே பராசக்தி பட குழுவைப் பொறுத்த வரைக்கும் அவர்கள் பொங்கல் தேதியில் உறுதியாக இருக்கிறார்கள்.

அவர்கள் பின்வாங்க போவதில்லை. ஏனெனில் இவர்கள்தான் முன்னதாகவே அந்த தேதியை லாக் செய்து இருக்கிறார்கள். இன்னொரு விஷயம் என்னவெனில் டான் பிக்சர்ஸ் பொருத்தவரைக்கும் இப்போது ரெட் ஜெயன்டை விட இவர்கள் தான் முன்னணியில் இருக்கிறார்கள். அதனால் ரிலீஸ் நேரத்தில் தியேட்டர் பஞ்சாயத்து பராசக்தி படத்திற்கு இருக்காது.

இன்னொரு விஷயம் பராசக்தி கதை என்பதே திமுகவிற்கு தேர்தலில் உதவி செய்யப் போகிற ஒரு படம். அதனால் பொங்கலை விட்டு நாங்கள் நகர மாட்டோம் என இவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். ஆகவே ஒரு பெரிய அரசியல் இருக்கிறது. இதில் பெரிய காமெடி என்னவெனில் 2026 தேர்தலில் தவெகவா? திமுகவா? என்ற ஒரு பெரிய போட்டியே இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னாடி பொங்கலுக்கு பராசக்தியா? ஜனநாயகனா? என்ற இன்னொரு ரேஸும் இருக்கிறது.

Next Story