சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, அதர்வா உள்ளிட்ட பலரும் நடித்து சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான திரைப்படம்தான் பராசக்தி. 1960களில் தமிழகத்தின் பல ஊர்களிலும் இளைஞர்களிடம் எழுச்சியை ஏற்படுத்திய ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருந்தார் சுதா கொங்கரா.
விஜயின் ஜனநாயகன் படம் ஜனவரி 9ம் தேதியும், பராசக்தி 10ம் தேதியும் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இது விஜய் ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தவே சமூகவலைத்தளங்களில் சிவகார்த்திகேயனையும், பராசக்தி படக்குழுவையும் திட்ட துவங்கினார்கள். ஒருபக்கம் ஜனநாயகன் படம் வெளியாகாமல் போனதால் விஜய் ரசிகர்களின் கோபம் அதிகமானது. எனவே, பராசக்தி படத்திற்கு எதிராக எதிர்மறையான விமர்சனங்களை பரப்ப துவங்கினார்கள்.
ஒருபக்கம், படத்திற்கும் நெகட்டிவான விமர்சனங்கள் வரவே படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை. படம் வெளியாகி 2 நாட்களில் 50 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. ஆனால், இது பொய்யான தகவல் என விஜய் ரசிகர்கள் கூறினார்கள். இந்நிலையில், பராசக்தி திரைப்படம் வெளியாகி ஒரு வாரத்தில் 41 கோடி வசூல் செய்திருப்பதாக sacnilk இணையதளம் செய்தி வெளியிட்டிருக்கிறது. குறிப்பாக 7வது நாளான நேற்று இப்படம் 4.75 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக அதில் கூறப்பட்டிருக்கிறது.