அஜித்த மட்டுமே பேசுறிங்க!.. எந்த பின்புலமும் இல்லாம வந்தது நானும் தான்!.. தற்பெருமை பேசிய பிரபல நடிகர்..
தமிழ் சினிமாவின் முன்னனி நடிகராக திகழ்பவர்களில் குறிப்பிடத்தக்கவர் நடிகர் அஜித். ரசிகர்களின் லட்சிய நடிகராக வலம் வருகிறார் அஜித். ரசிகர் மன்றத்தை கலைத்தாலும் தமிழ் நாட்டு மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று மகத்தான கலைஞனாக உயர்ந்து நிற்கிறார் அஜித்.
ஆரம்பகாலங்களில் அவர் பட்ட கஷ்டம் தான் இந்த அளவுக்கு ஒரு மகத்தான வெற்றியை பெற வழிவகுத்தது. எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தன் சொந்த முயற்சியால் கடின உழைப்பால் ஏகப்பட்ட துயரங்களை கடந்து இன்று ஒரு உன்னத நடிகராக வளர்ந்து நிற்கிறார்.
யாரைக் கேட்டாலும் அஜித்தை பற்றி சொல்வது இது தான். அவர் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் வந்தவர் என்று. ஆனால் நானும் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் வந்தவன் தான் என்று கூறியிருக்கிறார் நடிகர் பார்த்திபன். அவர் ஒரு பேட்டியில் சந்தித்த போது அவரின் தொடக்கக் கால சினிமா வாழ்க்கையை பற்றி விவரித்தார்.
இதையும் படிங்க : “துணிவு” படத்திற்கு சென்சார் போர்டு போட்ட முட்டுக்கட்டை… இப்படி ஏமாத்திட்டாங்களேப்பா!!
நடிகராக வேண்டும் என ஆசைப்பட்டு சினிமாவிற்கு நுழைந்தவர் தான் பார்த்திபன். ஆனால் விதி
அவரை முதலில் உதவி இயக்குனராக மாற்றியிருக்கிறது. பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் பின் ஒரு படத்தில் நடிகராக மாறியிருக்கிறார்.
இவ்வாறு அவரது வாழ்க்கை கதையை சொல்லும்போது எல்லாரும் அஜித் தான் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் வந்தவர் என்று கூறுவார்கள். நானும் தான் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் வந்தவன் என்று கூறி சிரித்தார்.