பரிதாபங்கள் டீமின் படம் ஓவர்!. ஆடியோ லான்ச்சிக்கு வேறமாறி பிளான் போட்ட கோபி – சுதாகர்…

Published on: September 6, 2023
parithabangal
---Advertisement---

மெட்ராஸ் சென்ட்ரல் என்கிற யுடியூப் சேனல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர்கள் கோபி – சுதாகர் கூட்டணி. அரசியல், மக்களின் சந்திக்கும் பிரச்சனைகள், சமகால நிகழ்வுகள் என பல டாப்பிக்குகளை அலசி, நய்யாண்டி செய்து, நக்கலடித்து வீடியோ போட்டு இவர்கள் நெட்டிசன்களிடம் பிரபலமானார்கள்.

அதன்பின் தங்களின் யுடியூப் சேனலின் பெயரை பரிதாபங்கள் என மாற்றினர். இவர்களுக்கு லட்சக்கணக்கான ரசிகர்களும் இருக்கிறார்கள். 4.89 மில்லியன் அதாவது கிட்டத்தட்ட 50 லட்சம் பேர் இவர்களின் யுடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளனர். இவர்களின் ஒவ்வொரு வீடியோவையும் பல லட்சம் பேர் பார்த்து ரசிக்கிறார்கள்.

இதையும் படிங்க: பாகுபலி கிட்ட கட்டப்பாவா மண்டியிட்ட ஷாருக்கானின் ஜவான்!.. அட்வான்ஸ் புக்கிங் இவ்ளோதானா!..

ஒருகட்டத்தில் இவர்களுக்கு சினிமா எடுக்கும் ஆசையும் வந்தது. அதற்காக கிரவுட் ஃபண்டிங் மூலம் ரசிகர்களிடமே பணத்தை வசூல் செய்தனர். உங்களால் என்ன கொடுக்க முடியுமோ கொடுங்கள் என அவர்கள் கேட்க அவர்களுக்கு பலரும் பணம் கொடுத்தனர். இறுதியில் ரூ.6 கோடி பட்ஜெட்டில் ஒரு புதிய படத்தை துவங்கினார்கள்.

parithbangal

ஆனால், அந்த படத்தை முடிக்க பட்ஜெட் போதாது என சொல்லி அதை கிடப்பில் போட்டுவிட்டு வேறு ஒரு படத்தை துவங்கினார்கள். இந்த படம் இப்போது முடிவுக்கு வந்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இப்படத்திற்கு இன்னமும் தலைப்பு வைக்கப்படவில்லை. இப்படத்தில் கோபி, சுதாகர் இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: அடடே விடாமுயற்சி ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன்னாடியே ஃபைட் சீன் அப்டேட் வந்துடுச்சே!.. தல தாங்குவாரா?..

இப்படம் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. விஷ்ணு விஜயன் என்பவர் இப்படத்தை இயக்கியுள்ளார். இது தொடர்பான வீடியோவையும் பரிதாபங்கள் டீம் வெளியிட்டுள்ளது. எனவே, இப்படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை தமிழகத்தின் சில மாவட்டங்களில் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதாவது, எந்தெந்த மாவட்டங்களிலெல்லாம் அவர்களுக்கு ரசிகர்கள் அதிகமாக இருக்கிறார்களோ அங்கெல்லாம் சென்று இசை வெளியீட்டு விழாவை நடத்த போகிறார்களாம். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என கணிக்கப்படுகிறது.

இதையும் படிங்க: கதை சொல்ல வந்தா இப்படியா?!… காரில் ஜல்ஷா பண்ணி மார்க்கெட்டை இழந்த விமல்!..

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.