பார்க்கிங் விமர்சனம்: ரெண்டுல ஒண்ணு பார்த்துடலாம்!.. பார்க்கிங் பார்க்கலாமா? வேண்டாமா?..

இயக்குனர் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், இந்துஜா ரவிச்சந்திரன் மற்றும் எம்.எஸ். பாஸ்கர் நடிப்பில் இன்று வெளியான பார்க்கிங் திரைப்படம் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு எல்லாம் மீண்டும் என்ட்ரி கொடுத்து புரமோஷனையும் அனல் பறக்க வைத்திருந்தார் ஹரிஷ் கல்யாண். இந்துஜாவும் பூர்ணிமாவின் பழைய தோழி என்கிற பஞ்சாயத்தும் படத்துக்கு பெரியளவில் புரமோஷனாக மாறியது.

இதையும் படிங்க: எனக்கு வேஷம் இல்லையா?!. இயக்குனரையே மிரட்டிய சோ!.. ராமசாமி ‘சோ’ ஆன கதை இதுதான்!.,.

வாடகை வீட்டில் மேல் வீட்டில் இருப்பவருக்கும், கீழ் வீட்டில் வசிப்பவருக்கும் ஒரே ஒரு பார்க்கிங் ஏரியா இருக்கும் நிலையில், அந்த இடத்துக்கு இருவரும் போட்டா போட்டி போட்டுக் கொண்டு காரை நிறுத்த ஆரம்பிக்கும் சண்டை எங்கே எல்லாம் கொண்டு சென்று விடுகிறது என்பதை 2.30 மணி நேரம் சுவாரஸ்யமிக்க படமாக இயக்குனர் உருவாக்கி மாஸ் காட்டி உள்ளார்.

கர்ப்பமாக இருக்கும் தனது மனைவியை சொகுசாக வெளியே கூட்டிச் செல்ல கார் வாங்கிக் கொண்டு வாடகை வீட்டில் மேல் போர்ஷனுக்கு குடி வருகிறார் ஹரிஷ் கல்யாண். அவரது மனைவியாக மேயாத மான், பிகில் உள்ளிட்ட படங்களில் நடித்த இந்துஜா ரவிச்சந்திரன் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: அனிமல் விமர்சனம்: ரன்பீர் கபூரின் அசுரத்தனமான நடிப்பு!.. அதை மட்டும் சரி செஞ்சிருக்கலாம் சந்தீப் ரெட்டி!

கீழ் வீட்டில் குடியிருக்கும் எம்.எஸ். பாஸ்கர் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியிருந்த இடத்தில் ஹரிஷ் கல்யாணின் கார் இடத்தை அடைத்துக் கொள்ள அதுக்கு போட்டியாக ஒரு காரை வாங்குகிறார். இருவருக்கும் இடையே முற்றும் மோதல்களும், போட்டா போட்டிகளும் படத்தை கடைசி வரை ரசிக்க வைக்கிறது. மீண்டும் ஒரு முறை தனது சூப்பரான நடிப்பை வெளிப்படுத்தி படத்தை பல இடங்களில் எம்.எஸ். பாஸ்கர் காப்பாற்றி உள்ளார். ஹரிஷ் கல்யாண் வில்லனா, ஹீரோவா என்று தெரியாத அளவுக்கு தனது நெகட்டிவ் ஷேடை வெளிப்படுத்தி ஸ்கோர் செய்துள்ளார். சில சொதப்பல்களும் இருந்தாலும் படத்தை கடைசி வரை என்கேஜிங்காக இயக்குனர் கொண்டு சென்று ஹிட் படமாக மாற்றி உள்ளார்.

பார்க்கிங் - பக்கா!

ரேட்டிங் - 3.5

Related Articles
Next Story
Share it