Cinema News
பார்ட் ஒன் சூப்பர் ஹிட்!. ஆனா பார்ட் 2 ஃப்ளாப் ஆன ஐந்து திரைப்படங்கள்!..
பார்ட் 2 திரைப்படங்களின் தோல்வி பட்டியல்
இந்த பதிவில் நாம பார்க்க இருப்பது பார்ட் 1 திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்திருக்கும் ஆனால் பார்ட் 2 திரைப்படம் மிகவும் மோசமான தோல்வியை தழுவியிருக்கும் ஐந்து படங்களை பற்றி பார்ப்போம் வாருங்கள்.
அந்த வகையில் நாம இப்ப பார்க்க இருக்க திரைப்படத்தின் பெயர் சார்லி சாப்ளின் இந்த திரைப்படம் 2002 இல் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அந்த சமயத்தில் தமிழ் சினிமா ரசிகர்களை மிகவும் கொண்டாடப்பட்ட ஒரு திரைப்படமாக அமைந்தது. மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் பிரபுதேவா மற்றும் பிரபு அவர்கள் கலகலப்பான தனது நடிப்பினை வெளிப்படுத்தி காமெடி கலந்த கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்து இந்த படத்தை வெற்றிக்கு வழி வகுத்தார்கள் இந்த வகையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் 2019 ஆம் ஆண்டு வெளிவந்திருந்தது. ஆனால் இந்த படம் போதிய வரவேற்பு இன்றி படுமோசமான திரைக்கதையை கொண்டதன் மூலம் தோல்வியை சந்தித்தது.
அடுத்ததாக 1979 ஆம் ஆண்டு கமல் நடித்த நீயா எனும் திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படம் பாம்பு மனிதனாக உருமாறி தன்னை போன ஜென்மத்தில் கொன்றவரை பழிவாங்கும் விதத்தில் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமாகும் இந்த திரைப்படம் மீண்டும் நீயா 2 என எடுக்கப்பட்டு அதற்கு நடிகராக ஜெய் நடித்திருந்தால் இந்த படத்தின் ஹீரோயின் ஆக லட்சுமி ராய் அவர்கள் நடித்திருந்தார்கள். இந்த படமும் போதிய வரவேற்பு இன்று தோல்வி படமாக அமைந்தது.
இதையும் படிங்க- நான் செஞ்ச வேலையால் அண்ணாவும், அப்பாவும் வீட்டை விட்டே போயிட்டாங்க!.. நளினி வாழ்வில் இவ்வளவு சோகமா!..
அடுத்ததாக வெண்ணிலா கபடி குழு எனும் திரைப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் 2009 ஆம் ஆண்டு இயக்கி இருந்தார்.இந்த படம் அந்த சமயத்தில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது ஒரு கிராமத்தில் நடக்கும் கபடி நிகழ்ச்சியை தொகுத்து படமாக எடுக்கப்பட்டிருந்தது. இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களை நிர்வாக கவர்ந்தது இதனை அடுத்து 2019 ஆம் ஆண்டு வெண்ணிலா கபடி குழு இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது இந்த படம் போதிய வரவேற்பு இன்றி தோல்வி படமாக அமைந்தது.
அடுத்ததாக 2010 ஆம் ஆண்டு வெளியான களவாணி என்னும் திரைப்படத்தை இயக்குனர் சற்குணம் அவர்கள் இயக்கியிருந்தார்கள்.இந்த படத்தில் நடிகர் விமல் அவர்கள் தனது சிறப்பான நடிப்பினை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படம் ஒரு கிராமத்து கதை அம்சம் கொண்ட திரைப்படம் என்பதால் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.மேலும் இந்த திரைப்படத்தின் பாகம் 2 2019 ஆம் ஆண்டு மீண்டும் சற்குணம் அவர்களை இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் ஆனால் இந்த படம் போதிய வரவேற்பு இன்றி படு தோல்வி படமாக அமைந்தது.
அடுத்ததாக நாம் பார்க்க இருக்கிற திரைப்படத்தின் பெயர் சாமி இந்த திரைப்படம் இயக்குனர் ஹரி அவர்களால் 2003 ஆம் ஆண்டு நடிகர் விக்ரம் அவர்களை வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதனை அடுத்து இந்த படத்தில் அற்புதமான தனது நடிப்பினை வெளிப்படுத்தி தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். நடிகர் விக்ரம் மேலும் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்குனர் ஹரி அவர்களே மீண்டும் 2018 ஆம் ஆண்டு இயக்கி இருந்தால் ஆனால் இந்த திரைப்படம் போதிய வரவேற்பு இன்றி தோல்வி படமாக அமைந்தது.
இதையும் படிங்க- அஜித்துக்கு அத கத்து கொடுத்ததே நான்தான்! வித நான் போட்டது – சீக்ரெட்டை பகிர்ந்த ரோபோ சங்கர்