இந்த படமும் தோல்வியா?!. பிபி எகிறி மருத்துவமனையில் அட்மிட் ஆன பார்த்திபன்!.. அட அந்த படத்துக்கா?!..
திரையுலகில் புதுமை விரும்பியாக, வித்தியாசமான கதைகளை ரசிகர்களுக்கு கொடுக்க வேண்டும் என்கிற தாகத்தில் இருப்பவர் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன். பாக்கியராஜிடம் உதவி இயக்குனராக வேலை செய்து புதிய பாதை திரைப்படம் மூலம் நடிகர் மற்றும் இயக்குனராக மாறினார். அதன்பின் உள்ளே வெளியே, ஹவுஸ்புல், குடைக்குள் மழை, சுகமான சுமை, ஒத்த செருப்பு, இரவின் நிழல் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
இதில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படமாக அவர் இயக்கிய திரைப்படம்தான் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம். ஒரு உதவி இயக்குனர் படம் இயக்க என்ன பாடுபடுகிறார் என்பதை இப்படத்தில் சொல்லியிருப்பார். இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை வித்தியாசமாக எடுத்திருப்பார்.
இந்த படம் பற்றி சமீபத்தில் பேசிய பார்த்திபன் ‘இந்த படத்தின் கதை மிகவும் வித்தியாசமானது. என் உதவி இயக்குனர்களே இந்த கதை ரசிகர்களுக்கு புரியாது என சொன்னார்கள். படத்தை முடித்துவிட்டு தயாரிப்பாளர் உட்பட 20 பேரை அழைத்து படத்தை போட்டு காட்டினேன். அவர்களில் ஒருவருக்கு கூட படம் பிடிக்கவில்லை. ஏதோ சமாதானம் கூறிவிட்டு சென்றுவிட்டனர். என்னை நம்பி தயாரிப்பாளர் அவ்வளவு பணத்தை போட்டுள்ளார். இந்த படமும் தோல்வி அடைந்தால் என்ன செய்வது என நினைத்து எனக்கு பிபி எகிறி மருத்துவமனைக்கு சென்று படுத்துவிட்டேன்.
அதன்பின் உடல்நிலை சரியானதும் பொறுமையாக யோசித்தேன். திரையுலகினர் அப்படித்தான் படம் பார்ப்பார்கள். எங்கேயும் சிரிக்காமல் சீரியஸாக பார்ப்பார்கள். அவர்களிடம் உங்கள் வீட்டில் இருக்கும் இளைஞர்களை அழைத்து வாருங்கள் என வரவழைத்து படம் பார்க்க வைத்தேன். அவர்களுக்கு படம் பிடித்திருந்தது. எனவே, அதை நம்பி படத்தை ரிலீஸ் செய்தோம். ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது. படம் முடிந்த பின் ரசிகர்கள் கைதட்டி பாராட்டிவிட்டு சென்றனர். அது என் கனவாக இருந்தது’ என பார்த்திபன் பேசியிருந்தார்.
இதையும் படிங்க: தனுஷை பற்றி அன்றே கணித்த பாலுமகேந்திரா!.. வெற்றிமாறனுடன் பலமான கூட்டணி அமைந்த பின்னனி!..