கோபத்துல நயன்தாராவை வரக்கூடாதுன்னு சொன்னேன்!.. ஆனா இப்போ?!.. புலம்பும் பார்த்திபன்...
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா. கேரளாவை சேர்ந்த இவர் அங்கு தொலைக்காட்சியில் ஆங்கராகவெல்லாம் வேலை செய்துள்ளார். அதன்பின் படிப்படியாக முன்னேறி இப்போது பெரிய இடத்திற்கு வந்துள்ளார். தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக நயன்தாரா இருக்கிறார். நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது அப்படத்தை இயக்கிய விக்னேஷ் சிவனை காதலித்து ஒரு வருடத்திற்கு முன் திருமணமும் செய்து கொண்டார்.
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் நயன்தாரா நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில் நடித்த நடிகைகளில் அதிக சர்ச்சைகளிலும், செய்திகளிலும் சிக்கிய நடிகையாக இருப்பவர் இவர் மட்டும்தான். கடந்த சில வருடங்களாகவே விஜய், அஜித், ரஜினி, விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களுடன் மட்டுமே ஜோடிபோட்டு நடித்து வருகிறார். அதேபோல், பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள கதைகளிலும் நடித்து வருகிறார்.
சினிமாவில் நுழைய முயற்சி செய்த போது பல கஷ்டங்களை நயன்தாரா சந்தித்துள்ளார். பல வாய்ப்புகளை இழந்தும், சில வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தியும் முன்னேறினார். பல படங்களில் நடித்தும் இவர் ரசிகர்களிடம் பிரபலமாகவில்லை. 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தபின்னரே இவர் ரசிகர்களால் கவனிக்கப்பட்டார்.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய இயக்குனர் பார்த்திபன் ‘நயன்தாராவின் புகைப்படத்தை பார்த்துவிட்டு நான் இயக்கிய ‘குடைக்குள் மழை’ படத்தில் நடிக்க வைக்க அவரை ஒருநாள் காலை 8 மணிக்கு வர சொன்னேன். ஆனால், அன்று அவர் வரவில்லை. எனக்கு போன் செய்து ‘சார் என்னால் நேற்று வரமுடியவில்லை. இன்றுதான் பஸ் ஏறுகிறேன். நாளை காலை கண்டிப்பாக வந்துவிடுகிறேன்’ என சொன்னார். கோபத்தில் இருந்த நான் ‘இல்லை வர வேண்டாம்’ என சொல்லிவிட்டேன். எனக்கு அப்படித்தான் கோபம் வரும். இப்போது அவர் லேடி சூப்பர்ஸ்டார் ஆகிவிட்டார்’ என கூறியிருந்தார்.
தமிழ் சினிமாவில் வாய்ப்பு தேடியபோது அம்மாவுடன் கேரளாவிலிருந்து சென்னைக்கு நயன்தாரா பேருந்தில்தான் வருவார். தற்போது தனி விமானத்தில் செல்லும் அளவுக்கு மாறிவிட்டார்.
நயன்தாரா கதாநாயகியாக நடித்த ‘நானும் ரவுடிதான்’ படத்தில் பார்த்திபன் வில்லனாக நடித்தது குறிப்பிடத்தக்கது.