பார்த்திபனுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை!.. கார்த்திகை தீப போஸ்ட்.. உடனே மன்னிப்பு கேட்டுட்டாரு?..

கார்த்திகை தீபத்துக்கு கருத்து சொல்கிறேன் என்கிற பெயரில் நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் போட்ட போஸ்ட்டுக்கு நல்லாவே வாங்கிக் கட்டி வருகிறார்.

கிறிஸ்துமஸ், பக்ரீத் உள்ளிட்ட மற்ற மதத்தினரின் பண்டிகைகள் வரும் போது மட்டும் வாயை மூடிக் கொண்டு வாழ்த்தும் பிரபலங்கள் எல்லாம் இந்துக்களின் பண்டிகை என்று வந்து விட்டால் மட்டும் கருத்து கந்தசாமியை மாறிடுவாங்களே என ரசிகர்கள் வெளுக்க ஆரம்பித்து விட்டனர்.

இதையும் படிங்க: இறுதிச்சுற்று படம் எடுக்க இவங்க தான் இன்ஸ்பிரேஷன்!.. அந்தர் பல்டி அடித்த சுதா கொங்கரா!..

உடனடியாக ஏற்கனவே பல நடிகர்களின் வண்டவாளம் தண்டவாளம் ஏறி வரும் நிலையில், நாமும் தேவையில்லாமல் சிக்கலில் சிக்க வேண்டாம் என நினைத்த பார்த்திபன் அதிரடியாக மன்னிப்பு கேட்பது போல விளக்கம் ஒன்றை பதிவிட்டு எஸ்கேப் ஆகி உள்ளார்.

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு வீட்டில் விளக்கேற்றாமல் உங்கள் வீட்டில் பிள்ளைகள் இருந்தால் அவர்களை நடுக்கூடத்தில் உட்கார வைத்து சிரிக்க சொல்லுங்கள் என்றும் எண்ணெய், திரி, விளக்கு மற்றும் தீப்பெட்டி எல்லாம் மிச்சம் என பதிவிட்டு இருந்தார்.

இதையும் படிங்க: சினிமாக்காரனை கொண்டு வந்து அரசியல்ல நிறுத்தாதே!… அப்போதே சொன்ன எம்.ஆர்.ராதா

உடனடியாக இந்து மத ரசிகர்கள் பார்த்திபன் போஸ்ட்டுக்கு கீழ் திட்ட ஆரம்பித்து விட்டனர். சட்டென சுதாரித்துக் கொண்ட இரவின் நிழல் இயக்குனர் தனது வீட்டில் ஏற்றி வைத்த தீபத்தின் புகைப்படத்தை வெளியிட்டு, மன்னிக்க நண்பர்களே! பிள்ளைகளின் சிரிப்பு விளக்கை போல பிரகாசமானவை என்று சொல்ல வந்தேன். அதனால், சில பக்தர்களின் மனதை அது புண்படுத்தியிருப்பதை அறிகிறேன். எந்த உள்நோக்கமும் எனக்கில்லை - அதற்குள் மதமெல்லாம் வருகிறது. இனிமேல் கவனமாக பதிவிடுகிறேன் என ஜகா வாங்கி உள்ளார்.

 

Related Articles

Next Story