More
Categories: Cinema News latest news

மிக்ஜாம் புயலும் மத்திய பிரதேச விரோதிகளும்.. மழையில் வாடுபவர்களுக்கு உதவ பார்த்திபன் கோரிக்கை!..

நடிகரும் இயக்குநருமான பார்த்திபன் சூழலுக்கு ஏற்ப பதிவுகளை போடுவதில் கெட்டிக்காரர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான். கடைசியாக கார்த்திகை தீபத்துக்கு ஒரு போஸ்ட் போட்டு மன்னிப்பு எல்லாம் கேட்டார். ஆனால், தற்போது மிக்ஜாம் புயல் மழையை பேய் எனக் குறிப்பிட்டு அவர் பதிவிட்டு இருக்கும் பதிவு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

புயல் காலங்களில் முன்னணி நடிகர்கள் எல்லாம் மக்களுக்கு தேவையான நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருவதை இதற்கு முன் பலமுறை செய்துள்ளனர். இந்த முறையும் சென்னை மக்களை காப்பாற்ற அவர்கள் களம் இறங்க வேண்டும் என்பதே பார்த்திபனின் நோக்கம்.

Advertising
Advertising

இதையும் படிங்க: டெபாசிட் இழந்த பவன் கல்யாண்!.. விஜய்க்கு தலையில் இடியே இறங்கிடுச்சாம்.. அப்போ அந்த சி.எம். கனவு?..

”Good morning Friends It’s good to be safe. பாதுகாப்பாக இருங்கள். என சொல்லிவிடலாம் சுலபமாக….  ஆனால், தினமும் உழைத்து உண்பவர்களுக்கு இந்த பேய் மழையும்,மிக்ஜாம் புயலும் மத்திய பிரதேச விரோதிகள் என நேற்றைய அரசியல் நிலவரத்தையும் வைத்து சாடி உள்ளார். நாட்டின் ஒரு பகுதியில் காங்கிரஸும், மறுபகுதியில் பிஜேபியும் வெற்றி பெறலாம், ஆனால் வறுமையில் வாடும் மக்கள் உடலின் மத்திய பிரதேசத்தில் பசி இல்லாமல் பார்த்துக் கொள்வதே வெற்றி என குறிப்பிட்டுள்ளார்.

மழையை காதலி என்று கவிதையும் எழுதலாம். ஆனால் கஷ்டப்படுபவர்களுக்கு முயன்றதை செய்வதே இந்த நேரத்தில் சிறந்த செயல்! ‘புதிய பாதை’க்கு முன் இப்படிப்பட்ட மழை நேரத்தில் எங்கள் குடும்பத்தில் நாலு பேரும் நாலா திசைக்கும் சிதறி ஓடி உழைப்போம்.

இதையும் படிங்க: இத சொல்லியே ஆகணும்!. நீ அவ்வளவு அழகு!.. லவ் டுடே இவானாவின் நச் கிளிக்ஸ்…

ஒரு சிங்கிள் டீயே பிரியாணி போல பசிக்கு கிடைக்கும். சுடச்சுட ரசமும் சோறும் சொர்க்கமாகவே இருக்கும். E.17 mmda colonyயில்  குடிசை வீட்டுக்குள் மழையாக வந்து என் பள்ளி சான்றிதழ்களையும் கரைத்துவிட்டுப் போகும். இப்படி வறுமையை உண்டு வளர்ந்தவன் என்பதால், புயல் செய்திகளை கேட்க முடியாமல், பசியால் வாடும் மக்களை நோக்கியே என் கவனம் திரும்பும்.

அரசு செய்யும் உதவிகளை மீறி, அடுத்த அடுப்பில், அடுத்த வீட்டில் அடுத்த தெருவில் இப்படி அடுத்தவர்களின் பிரச்சனைகளுக்கு ஒருவருக்கொருவர் உதவினாலே அதுதான் சிறந்த மனிதநேயம்! பாதுகாப்புடன் மிக்ஜாமை எதிர்கொள்வோம் என பதிவிட்டுள்ளார் பார்த்திபன்.

Published by
Saranya M

Recent Posts