கோல்டன் விசா பெற்ற முதல் தமிழ் நடிகர்... அவரே வெளியிட்ட தகவல்...!

parthiban
சமீபகாலமாகவே ஐக்கிய அரபு அமீரகம் தென்னிந்திய நடிகர்களுக்கு கோல்டன் விசா வழங்கி வருகிறது. அந்த வகையில் பிரபல மலையாள நடிகர்களான மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான் உள்ளிட்ட பல நடிகர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் கோல்டன் விசாவை பெற்றுள்ளனர்.
தற்போது அந்த வரிசையில் பிரபல தமிழ் நடிகரும் தேசிய விருது இயக்குனருமான பார்த்திபன் இடம்பிடித்துள்ளார். ஆம் இந்த ஆண்டு நடைபெற்ற கோல்டன் விசா வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகரும் இயக்குனருமான பார்த்திபனுக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள பார்த்திபன், "Golden Visa இன்று துபாயில் எனக்கு வழங்கப்பட்டது. இந்த கௌரவத்தை பெறும் முதல் தமிழ் நடிகர் நான் என்பதாக, அதை பெற்றுத் தர முயற்சி எடுத்த அனைவருக்கும் நன்றி.
தமிழ் நடிகர்களில் Golden Visa பெரும் முதல் நடிகர் என்றும் கூறினார்கள். விசாரித்துப் பார்த்ததில் உண்மைப் போலவே தோன்றியது" என்று நகைச்சுவையாக பதிவு செய்துள்ளார்.

parthiban
ஒவ்வொரு ஆண்டும் திரைத்துறையில் சிறந்து விளங்கும் நடிகர் மற்றும் நடிகைகளை தேர்வு செய்து அவர்களை கெளரவப்படுத்தும் விதமாக ஐக்கிய அரபு அமீரகம் இந்த கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. இந்த Golden Visa என்பது துபாய் நாட்டில் சொந்தமாக தொழில் தொடங்கவும், படிப்பு மற்றும் வேலை பார்க்க உதவியாக உள்ளது.
சமீபத்தில் பார்த்திபன் இயக்கி நடித்திருந்த ஒத்த செருப்பு படத்திற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. தற்போது அதனை தொடர்ந்து கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளதால் பார்த்திபன் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்.