Categories: Cinema News latest news

’இரவின் நிழல்’ படத்தின் இடைவேளையில் இப்படி ஒரு ட்விஸ்டா…? பகிரங்கமாக கூறிய பார்த்திபன்…!

தமிழ் சினிமாவில் எதிலும் ஒரு புதுமையை புகுத்த விரும்புபவர் நடிகர் பார்த்திபன். வித்தியாசமான படைப்பாளி. தன் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான அணுகுமுறையை புகுத்தி உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

இந்த வரிசையில் இவரின் அடுத்த படமான இரவின் நிழல் படம் வரவிருக்கிறது. இந்த படம் சிங்கிள் ஷார்ட்டில் எடுக்கப்பட்ட படமாக அமைந்துள்ளது. மேலும் இந்த படத்திற்காக ஏஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முதல் சிங்கிள் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

படம் ஜூலை 15 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. மேலும் இந்த படம் சிங்கிள் ஷார்ட்டில் தான் எடுக்கப்பட்டது என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துவதற்காக இந்த படத்தின் உருவாக்க வீடியோவை மக்களுக்கு போட்டு காட்ட திட்டமிட்டுள்ளாராம் பார்த்திபன்.அதுவும் எப்பொழுது என்று கூறினால் ஆச்சரியப்படுவீர்கள்.

இந்த படம் ஒரே ஷார்ட்டில் எடுக்கப்பட்டதால் படத்தில் இடைவேளை என்பது சாத்தியப்படாதாம். அதனால் இடைவேளைக்கு முந்தைய காட்சியாக அதன் உருவாக்க வீடியோவை போட திட்டமிட்டுள்ளனர். இது சுமார் 30 நிமிட காட்சியாக ஒளிபரப்பப் படுகிறதாம். அதன் பின் இடைவேளை விட்டு இடைவேளைக்கு பிறகு தான் படமே ஆரம்பிக்கப்படுகிறதாம். இதை நடிகர் பார்த்திபன் சமீபத்தில் ஒரு நேர்காணலில் தெரிவித்தார்.

Published by
Rohini