இது கூட அவர்கிட்ட இல்லைனா எப்படி வாழ முடியும்?.. பிரிந்த காரணத்தை சொன்ன சீதா...
தமிழ் சினிமாவில் 90களின் காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சீதா. இவர் முதன் முதலில் பாண்டியராஜன் இயக்கத்தில் வெளியான ஆண் பாவம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். ஆனால் முதல் படத்திலேயே தனக்கும் பாண்டியராஜனுக்கும் ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள் வந்தன என பல பேட்டிகளில் சீதா கூறி இருக்கிறார்.
தமிழ் ,தெலுங்கு ,கன்னடம் ,மலையாளம் போன்ற மொழிகளில் கிட்டத்தட்ட 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சீதா சின்ன திரையிலும் தற்போது தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார். நடிகை சீதா பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். அவர்கள் இருவரும் நடித்த புதிய பாதை என்ற படத்தின் மூலம் தான் இருவருக்கும் காதல் மலர்ந்தது.
அதன் பின் 1990 ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர் அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தையும் ஒரு ஆண் குழந்தையும் இருக்கின்றனர். ஆனால் அவர்களுக்குள் திருமணத்திற்கு பிறகு நிறைய கருத்து வேறுபாடுகள் வரவே 2001 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். அதைப்பற்றி பார்த்திபனும் வெளிப்படையாக கூறியிருக்கிறார். சீதாவும் பல பேட்டிகளில் வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
பார்த்திபன் பேட்டிகளில் கூறியதை கருத்தில் கொண்டால் ஒரு விதத்தில் மாமியார் மருமகள் பிரச்சனையும் ஒரு காரணமாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் சீதா அதிக எதிர்பார்ப்பு கொண்டவர் .அதனால் தான் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்ற காரணத்தையும் பார்த்திபன் கூறி இருக்கிறார்.
ஆனால் இதற்கு பதில் அளித்த சீதா "அந்த அளவுக்கு எதிர்பார்ப்பு ஒன்றும் எனக்கு இல்லை. நானும் ஒரு மிடில் கிளாஸ் பொண்ணுதான், அவரும் ஒரு மிடில் கிளாஸ் பையன் தான் ,எந்த ஒரு ஆஸ்தி அந்தஸ்தையும் எதிர்பாராமல் தான் அவரை திருமணம் செய்து கொண்டேன் "என்று கூறியிருக்கிறார்.
மேலும் கூறிய சீதா" நான் எதிர்பார்த்தது எல்லாம் ஒன்றுதான் .நடிகை சுகாசினி ஒரு பாடலில் என் புருஷன் தான் எனக்கு மட்டும்தான் என்று சொல்லி பாடுவார். அதே போல் தான் நானும் .அவரிடம் அன்பு ஒன்றை மட்டும் தான் எதிர்பார்த்தேன். அது கிடைக்காத பட்சத்தில் தான் எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது" என்று அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.