குறை இருப்பது உண்மைதான்!.. முதல்ல அது பொன்னியின் செல்வன் கதையே கிடையாது.. பொசுக்குனு இப்படி சொல்லிட்டீங்களே?..
பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளியானது பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம். முதல் பாகம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாகமும் ரசிகர்களிடையே ஓரளவு வரவேற்பை பெற்றது.
ஆனால் கல்கியின் நாவலை படித்தவர்களுக்கு இந்த இரண்டாம் பாகம் கொஞ்சம் ஏமாற்றத்தை தான் தரும். படத்தில் ஒரு சில இடங்களில் மணிரத்தினம் அவருக்கு ஏற்றவாறு கதையை மாற்றியிருப்பதாக கூறிவருகிறார்கள். ஆனால் படத்தில் நடித்த நடிகர்கள் அவரவர் கதாபாத்திரங்களை நல்ல முறையில் நடித்து கொடுத்தனர்.
இந்த நிலையில் நடிகர் பார்த்திபன் சமீபத்தில் நிரூபர்களுக்கு பேட்டி கொடுத்தார். அப்போது நிரூபர் ஒருவர் படத்தில் இருந்த குறையை பற்றி கேட்டார். அதற்கு பார்த்திபன் ‘இது கோபால ரத்தினத்தின் செல்வன் கதை, பொன்னியின் செல்வன் கதை இல்லை, அதாவது மணிரத்தினத்தின் அப்பா பெயர் கோபால ரத்தினமாம், அதனால் அவருடைய செல்வன் மணிரத்தினத்தின் கதை’ என்று கூறிவிட்டு,
இது மணிரத்தினத்தின் புனைவு என்றும் இந்தக் கதையை ஏன் இவ்ளோ வருஷம் எடுக்க முடியாமல் போனது என்றும் 13 எபிசோடுகளாக எடுக்க வேண்டிய கதையை இரண்டு பாகங்களாக கொடுக்க வேண்டுமென்றால் அதில் எவ்ளோ ரிஸ்க் இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
படத்தில் ஆயிரம் குறைகள் இருக்கத்தான் செய்யும் என்றும் ஒரு நல்ல வசூலை கொடுத்திருக்கிறார் மணிரத்தினம் அதனால் அதற்காக அவரை நாம் பாராட்ட வேண்டும் என்றும் கூறினார். ஒரு நாவலை படமாக எடுக்கும் போது முழுமை பெறாதது தான். மேலும் ஒரு வரலாற்று நாவலில் க்ளைமாக்ஸை மாற்றியது முறையானது இல்லைதான். இருந்தாலும் இது அவரின் புனைவு என்றுதான் என் பக்கம் கூறுவேன் என்று பார்த்திபன் கூறினார்.
இதையும் படிங்க : ஆடை எல்லாம் களைஞ்சிருக்கும்..சரி பண்ணுடினு சொன்னா என்ன சொல்லுவா தெரியுமா?.. சில்க் பற்றிய ரகசியத்தை பகிர்ந்த நடிகை..