விஜய் படத்தை இயக்க ஆசைப்படும் தேசிய விருது இயக்குனர்.... ஆசை நிறைவேறுமா?

by ராம் சுதன் |
vijay
X

vijay

கோலிவுட்டில் வசூல் மன்னனாக வலம் வரும் தளபதி விஜய் தற்போது ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் பீஸ்ட் படம் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தை தொடர்ந்து விஜய் நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க உள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாக உள்ள இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்க, தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க உள்ளார். இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை கைப்பற்ற இப்போதே போட்டா போட்டி நிலவி வருகிறது.

விஜய் படங்களுக்கு மட்டுமல்ல விஜய்க்கும் தற்போது ஏகப்பட்ட டிமாண்ட் உள்ளது. தளபதி 66 படத்தை தொடர்ந்து வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ் என அடுத்தடுத்து பல இயக்குனர்கள் விஜயை இயக்க தயாராக உள்ளார்கள். விஜய்யும் அடுத்தடுத்து மிகவும் பிசியாக உள்ளார். விஜய் படங்களுக்கு நல்ல வரவேற்பு இருப்பதால் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் விஜய்க்காக பொறுமையாக காத்திருக்கிறார்கள்.

parthiban

parthiban

பலரும் விஜய்யுடன் பணிபுரிய ஆர்வமாக உள்ள நிலையில் பிரபல இயக்குனரும், நடிகருமான பார்த்திபனும் விஜய் படத்தை ஆசைப்படுவதாக கூறியுள்ளார். அதன்படி சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய பார்த்திபன், "எனக்கு விஜய் படத்தை இயக்க ஆசை இருக்கிறது. விரைவில் அது நடக்கும்" எனதெரிவித்துள்ளார். இதனால் ஒரு வேளை விஜய் பார்த்திபன் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு இருக்கலாம் என கூறப்படுகிறது.

பார்த்திபன் தற்போது அவரே இயக்கி நடித்த ஒத்த செருப்பு படத்தின் ஹிந்தி ரீமேக்கை இயக்கி வருகிறார். இதில் பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒத்த செருப்பு படம் சமீபத்தில் இரண்டு தேசிய விருதுகளை பெற்றதோடு பலரது பாராட்டையும் தட்டி சென்றது.

Next Story