Categories: Cinema History latest news

இயக்குனர் பாக்யராஜை திட்டம் போட்டு பழிவாங்கிய பார்த்திபன்.! அது எவளோ பெரிய வாய்ப்ப.!

சினிமாவில் வாய்ப்பு என்பது ஒரு முறை தான் கதவை தட்டும். அதனை கெட்டியாக பிடித்து கொள்ள வேண்டும். அதில் கடுமையாக உழைத்து ஜெயித்தால் அடுத்தடுத்த வாய்ப்புகள் கண்டிப்பாக கிடைக்கும். அதிலும் கடுமையாக உழைத்தால்  தொடர் வெற்றி அடையலாம்.

அப்படி கடுமையாக உழைத்து தொடர் வெற்றி பெற்றவர்கள் வெகு சிலரே. ஆனால் யாரும் முதல் வாய்ப்பை தவற விடுவது கிடையாது. அது எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் யார் தயாரிப்பாளராக இருந்தாலும், ஒரு அறிமுக இயக்குனருக்கு வாய்ப்பு கிடைத்தால், அவர் அதனை கெட்டியாக பிடித்து அதை வைத்து அதில் கடுமையாக உழைக்க போராடுவார்.

 

இயக்குனர் பாக்யராஜ் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் பார்த்திபன். பார்த்திபன் மிகவும் திறமைசாலி. இதனை கண்டறிந்த பாக்யராஜ், தானே ஒரு சொந்த படம் தயாரித்து, அதில் பார்த்திபனை ஹீரோவாகவும், இயக்குனராகவும் அறிமுகப் படுத்தி விடலாம் என நினைத்து கூறியுள்ளார்.

இதையும் படியுங்களேன் – அந்த ஊரு சினிமாவ அசிங்க படுத்திய ராக்கி பாய்.! ஒரு வீடியோவில் மொத்த மானமும் போச்சே..,

இதற்கு பார்த்திபனும் ஓகே சொன்னதாக கூறப்படுகிறது. பிறகு அந்த படத்திற்கு கேள்விக்குறி என தலைப்பும் வைத்து அறிவிக்கவும் செய்து விட்டார்களாம். ஆனால், அதன் பிறகு பாக்யராஜ் மற்றும் பார்த்திபன் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக தனது முதல் படத்தையே வேண்டாம் என்று மறுத்துவிட்டாராம் பார்த்திபன்.

அதன் பிறகு சில வருடங்கள் கழித்து புதியபாதை எனும் திரைப்படம் மூலம் ஹீரோவாகவும் இயக்குனராகவும் அறிமுகமானார் பார்த்திபன். முதல் வாய்ப்பை தவற விட்டாலும், தனது திறமை மூலம் அடுத்த வாய்ப்பை கெட்டியாக பிடித்து கொண்டார் பார்த்திபன்.

Published by
Manikandan