Connect with us
par

Cinema News

என்னதான் இசைஞானியா இருக்கட்டுமே! இந்த கேள்வியை கேட்கலாமா? சரியான பதிலடி கொடுத்த பார்த்திபன்

Actor Parthiban : தமிழ் சினிமாவில் இசையில் மாமேதையாக விளங்கி வருபவர் இசைஞானி இளையராஜா. 80களில் தனது இசையால் அனைவரையும் ஆட்டிப் படைத்தவர். ஒரே நாளில் ஐந்து ஆறு படங்களுக்கு இசையமைக்கும் வல்லமை கொண்டவர் இளையராஜா. ஆரம்பத்தில் கச்சேரிகளில் இசையமைத்துக் கொண்டிருந்தவர் படிப்படியாக முறைப்படி கர்நாடக  இசையை பயின்றவர்.

எத்தனை விருதுகள், தேசிய விருதுகள். இருக்கிற பெருமைக்கெல்லாம் சொந்தக்காரராக திகழ்ந்து வருகிறார் இளையராஜா. இத்தனை சாதனைகளை படைத்த இளையராஜாவை பற்றி அவ்வப்போது சில விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிங்க: அது என் கூடவே பிறந்தது! ‘ராஜாராணி’ முதல் ‘ஜவான்’ வரை கொஞ்சமும் மாறாத அட்லீ – இதுல கோட்ட விட்டீங்களே

புகழ் உயர்ந்தால் கர்வமும் சேர்ந்து உயரும் என்று சொல்வார்கள். அதைப் போலதான் இளையராஜாவை பற்றி சில சர்ச்சையான பேச்சுக்கள் வந்து கொண்டிருந்தன. யாரையும் மதிக்க மாட்டார், மரியாதையுடன் நடத்த மாட்டார், கர்வம் பிடித்தவர் என்றெல்லாம் அவரைப் பற்றி பல செய்திகள் வருகின்றன.

இந்த நிலையில் பார்த்திபன் ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்றில் இளையராஜாவை பற்றி கூறியிருக்கிறார். அதாவது ஒரு பொது மேடையில் பார்த்திபனை பார்த்து இளையராஜா ‘உனக்கு இசையை பற்றி தெரியுமாயா?’ என கேட்டிருப்பார்.

இதையும் படிங்க: இது எப்போ? எனக்கே புதுசா இருக்குங்க… இனிமே சொல்லிட்டு கிளப்புங்க… ஓபனாக உடைத்த விமல்..

இதைப் பற்றி சொல்லும் போது ‘என்னை அப்படி கேட்டு அவமானப்படுத்தினார் இளையராஜா. ஆனால் அதற்கெல்லாம் நான் கொஞ்சம் கூட வெட்கப்படவில்லை. ஏனெனில் சத்தியமா எனக்கு இசையை பற்றி தெரியாது’ என பார்த்திபன் கூறினார்.

மேலும் கூறும் போது ‘சொல்லபோனால் என்னிடம் அந்த கேள்வியை அவர் கேட்டிருக்கவே கூடாது. மீறி கேட்டிருக்கிறார் என்றால் அவருக்கு ஒன்றும் தெரியாது என்பதுதான் உண்மை’ என பார்த்திபன் கூறினார்.

இதையும் படிங்க: ஐஸ்கிரீமை காட்டி குழந்தையை ஏமாத்துற மாதிரிதான்! இத வாங்கிக் கொடுத்து ஜோதிகாவை ஆடவைத்த கலா

அதுமட்டுமில்லாமல் பார்த்திபன் ஒரு ஹிந்தி பட சூட்டிங்கில் இருக்கும் போது இளையராஜாவை பார்க்கும் சந்தர்ப்பம் பார்த்திபனுக்கு கிடைத்ததாம். அப்போது இந்த சம்பவத்தை பற்றி கேட்டாராம் பார்த்திபன். அதற்கு இளையராஜா ‘ நான் கேட்டால் நீ திருப்பி என்னிடம் கேட்கவேண்டியது தானே, உனக்கு இசையை பற்றி தெரியுமானு ?’ என்று சொல்லிவிட்டு,

எனக்கு சுத்தமா இசையை பற்றி இன்று வரை தெரியாது என்றும் ஏதோ அது இதுனு போட்டு உருட்டிக் கொண்டு இருக்கிறேன் என்று பார்த்திபனிடம் இளையராஜா கூறினாராம்.

google news
Continue Reading

More in Cinema News

To Top