Ajith: அவர் கௌரவமா நடிச்சாரு.. ஆனா என் கேரக்டர்? அஜித் படம் பற்றி பார்த்திபன் பதிவு

ajith_parthiban
Ajith: ஆரம்பத்திலிருந்து பார்த்திபன் பேட்டிகளை பார்க்கும் பொழுது ஏதாவது ஒரு வகையில் அஜித்தை பற்றி போற போக்கில் சொல்லிவிட்டு செல்வார். அதைப் பார்த்த பலரும் அஜித் மீது இவருக்கு என்ன கோபம் அல்லது பொறாமையா என்றெல்லாம் கமெண்ட்களில் கேட்டிருக்கின்றனர். அஜித்துடன் பார்த்திபன் சேர்ந்து நடித்த முதல் படம் நீ வருவாய் என. அந்த படத்தில் ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பார் அஜித்.
அப்போது நானும் அஜித்தும் அந்த சமயத்தில் பேசிக்கொள்ளவே இல்லை. எங்கள் இரண்டு பேருக்கும் இடையே காட்சிகளும் இல்லை என்றவாறு சொல்லி இருப்பார் பார்த்திபன். அதன் பிறகு மீண்டும் இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படம் உன்னைக்கொடு என்னை தருவேன். அந்த படத்தில் பார்த்திபன் பிளாஷ்பேக்கில் ஒரு ரவுடியாக நடித்திருப்பார் .அதுதான் அஜித்தின் தந்தையாகவும் கதை மாறி வரும்.
இதைப்பற்றி தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பார்த்திபன் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கிறார். நண்பர் ஏகே அவர்களுடன் நடித்த இரண்டாவது படம் உன்னைக் கொடு என்னை தருவேன். நீ வருவாய் என படத்தில் அவர் கௌரவத்திற்கு ஏற்ப கௌரவ இடத்தில் நடித்திருப்பார். இதில் நான் அவ்வளவு கெளரவம் இல்லா ரவுடியாக நடித்திருப்பேன். டப்பிங் பேசியபோது bit by bit பார்த்தேன்.
இப்போதுதான் என் பகுதியை முழுமையாக பார்த்தேன். அதை உங்களுக்கும் பகிர்கிறேன் என உன்னைக் கொடு என்னை தருவேன் படத்தில் பார்த்திபன் சம்பந்தப்பட்ட காட்சிகளை மட்டும் கட் செய்து தன்னுடைய insta பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார் பார்த்திபன். இவர் சொல்வதைப் போல நீ வருவாய் என படத்தில் பார்த்திபன் முதன்மையான கேரக்டரிலும் அஜித் கெஸ்ட் ரோலிலும் நடித்திருப்பார்.

அந்தப் படத்தில் அஜித் டீசன்டாக வந்து சென்று இருப்பார். ஆனால் உன்னை கூட என்னை தருவேன் படத்தில் பாம் சேகர் என்ற கதாபாத்திரத்தில் ஒரு ரவுடியாக நடித்திருப்பார். அஜித் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதைக் குறிப்பிட்டு தன்னுடைய பதிவில் இவ்வாறு பதிவிட்டு இருக்கிறார் பார்த்திபன்.