எச்.வினோத்த அடிச்சு சாவடிச்சிரலானு தோணுது! பார்த்திபனுக்கு அப்படி என்ன கோபம்?
Parthiban:எதை பேசினாலும் குதர்க்கமாக பேசுவதில் வல்லவர் நடிகர் பார்த்திபன். புரியாமல் பேசி கேட்கிறவர்களையும் கடுப்பாக்குபவர். ஆனால் வார்த்தை மன்னன். வார்த்தையில் வித்தை காட்டுபவர் என்றே சொல்லலாம் பார்த்திபனை .அதிலும் கவிதைகள் மூலம் தான் சொல்ல வந்த கருத்தை அசால்டாக சொல்லிவிட்டு அனைவரையும் பிரமிக்க வைப்பவர்.
ஆரம்பத்தில் உதவி இயக்குனராக அறிமுகமாகி அதன் பிறகு நடிகராக மாறினார். நடிக்கும் போதே ஒரு சில படங்களை இயக்கவும் செய்தார் பார்த்திபன். அவருடைய இயக்கத்தில் வெளியான புதிய பாதை திரைப்படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு ஒரு ரீச்சை பெற்றுக் கொடுத்தது. ஏன் அந்தப் படம் தான் அவருக்கு ஒரு டர்னிங் பாயிண்டாகவும் அமைந்தது என்று சொல்லலாம் .
இதையும் படிங்க: தெரியாம வந்து மாட்டிக்கிட்டோமோ? விழி பிதுங்கி நிற்கும் ஜேசன் சஞ்சய்
அதில் அவர் ஹீரோவாக நடிக்கவும் செய்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த பார்த்திபன் தமிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத கலைஞராக மாறினார். சமீப காலமாக குணச்சித்திர நடிகராக நடித்து வருகிறார் பார்த்திபன். அது மட்டுமல்லாமல் புதுப்புது யுத்திகளை கையாண்டு ஒரு படத்தை வித்தியாசமான முறையில் எப்படி கொடுக்க வேண்டும் என்பதை யோசித்து படங்களை கொடுத்து வருகிறார்.
அவருடைய இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த டீன்ஸ் திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அவருக்கு இருக்கிற ஒரே ஆசை விஜயை வைத்து எப்படியாவது ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்பதுதான். ஆனால் விஜய் அரசியலில் ஆர்வம் காட்டி சினிமாவிற்கே முழுக்கு போட போகிறார். தளபதி 69 ஆவது படம் தான் விஜயின் கடைசி படம் என்பது அனைவருக்குமே தெரியும்.
இதையும் படிங்க:வணங்கானில் பட்ட அடி சாதாரண அடியா? சுதா கொங்கராவை அலைய வைக்கும் சூர்யா
அந்தப் படத்தை எச் வினோத் இயக்குகிறார். எச் வினோத்தை பொறுத்தவரைக்கும் பார்த்திபனிடம் உதவியாளராக இருந்தவராம். அதனால் வினோத்தை பற்றி ஒரு பேட்டியில் பார்த்திபன் கூறும் போது எனக்கு உதவியாளராக இருந்தவன் வினோத். இப்போது விஜய்யை வைத்து ஒரு பெரிய படத்தை எடுக்கப் போகிறார்.
அதை நினைக்கும் போது பெருமையாக இருந்தாலும் வினோத்தை எப்ப பார்க்கிறோமோ அப்ப அவனை அடிச்சு சாவடிச்சிடலாம் போல தோணுது. ஏனெனில் எனக்கு உதவியாளராய் இருந்தவன். நான் இன்னும் விஜய வைத்து ஒரு படம் கூட எடுக்கவில்லை. என்னுடைய ஆசையே அதுதான். பெரிய கமர்சியல் படத்தை விஜயை வைத்து கொடுக்க வேண்டும் என நினைத்தேன்.
இதையும் படிங்க:பிரியங்காவுக்கு விழுந்த செருப்படி… கோமாளிக்கும் குக்குக்கும் என்ன சம்பந்தம்? ஷாக்கிங் தகவல்!
அதிலும் விஜய்க்கு ஹியூமர் நன்றாகவே வரும். அதனால் ஒரு ஹியூமர் சப்ஜெக்ட்டில் விஜயை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என நினைத்தேன். இப்போது என்னுடைய உதவியாளர் பண்ண போகிறார் .அதனால் தான் சொல்கிறேன் என எப்பவும் போல கிண்டலாக பேசினார் பார்த்திபன்.