இளையராஜாவுக்கு அது தெரியாது!.. அதுதான் பிரச்சனை!.. ஓப்பனா பேசிட்டாரே பார்த்திபன்!..

by சிவா |   ( Updated:2024-07-19 04:30:58  )
parthiban
X

இளையராஜா ஒரு இசை மேதை என்றாலும் அவர் கோபக்கரார், திமிறு பிடித்தவர், கர்வம் கொண்டவர் என்கிற கெட்டப்பெயர்களை திரையுலகினர் அவர் மீது எப்போதும் வைத்திருக்கிறார்கள். அதிக திறமையுள்ள ஒருவர் கண்டிப்பாக கர்வம் கொண்டவராகவே இருப்பார். திறமை இருந்தல் திமிறும் இருக்கும் எனவும் சிலர் சொல்வதுண்டு.

இளையராஜா நுனி மூக்கு கோபம் கொண்டவர். அவருக்கு எல்லாம் சரியாக இருக்க வேண்டும். இல்லையெனில் கோபம் வந்துவிடும். அவரின் சம்பளத்தை அவராக குறைப்பார். பல படங்களுக்கு சம்பளம் வாங்காமல் கூட இசையமைத்திருக்கிறார். ஆனால், குறைக்க சொல்லி கேட்டால் கோபப்படுவார்.

ஏனெனில், ஒரு கலைஞனின் கலைக்கு விலை கிடையாது. காசு வைத்து அதை மதிப்பிடக்கூடாது. அவருக்கு என்ன கொடுக்க வேண்டுமோ அதை கொடுத்துவிட வேண்டும். அதுதான் கலைஞனுக்கு கொடுக்கும் மரியாதை என நினைப்பவர் அவர். இது அவருடன் நெருங்கி பழகியவர்களுக்கு தெரியும்.

ஆனால், அவர் ஏதோ பேராசை பிடித்தவர் போல பலரும் தவறாக நினைப்பார்கள். தனது பாடலை மற்றவர்கள் வியாபார ரீதியாக பயன்படுத்தக்கூடாது என்பதைத்தான் அவர் சொல்கிறார். அதற்காகத்தான் நீதிமன்றம் போகிறார். ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடலை வைத்துக்கொண்டு மஞ்சுமல் பாய்ஸ் படத்தை ஓடவைத்து 250 கோடி லாபம் பார்த்தார்கள். முறைப்படி இளையராஜாவிடம் அனுமதி வாங்கி இருக்க வேண்டும். ஆனால், அவர்கள் அதை செய்யவில்லை.

இது பலருக்கும் புரியாமல் அவரை திட்டி வருகிறார்கள். இளையராஜாவை பிடிக்காதவர்கள் பலரும் திரையுலகில் இருக்கிறார்கள். ஒருகட்டத்தில் பெரிய இயக்குனர்கள் கூட ராஜா பக்கம் போகவில்லை. அதற்கு காரணம் இளையராஜா காட்டும் கோபம்தான். இன்னமும் அவர் அப்படித்தான் இருக்கிறார்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய பார்த்திபன் ‘ராஜா சார் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் என்பது என் விருப்பம். அவரை யாரும் விமர்சனம் செய்யக் கூடாது. அவர் சாதித்ததை எல்லாம் நான் செய்திருந்தால் மவுண்ட்ரோட்டில் தலைகீழாக நடந்திருப்பேன். அவரோ இவ்வளவு சாதனைகளையும் பண்ணிட்டு அமைதியா, பணிவா இருக்கார். அவர் தலைகணத்தோடு இருக்கார் என மற்றவர்கள் நினைக்கிறார்கள். சரியாக பேசி சபையை கவர அவருக்கு தெரியாது. அதுதான் இங்கே பிரச்சனை’ என சொல்லியிருக்கிறார்.

Next Story