Cinema News
‘இந்தியன் 2’ படத்தை பார்த்தாரா? இல்லையா? படத்தை பற்றி பார்த்திபன் சொன்ன விஷயம்
இந்தியன் 2 படம் ரிலீஸான அதே நேரத்தில்தான் பார்த்திபன் இயக்கி நடித்த டீன்ஸ் திரைப்படமும் வெளியானது. அப்போது திரையுலகில் இருக்கும் சில பிரபலங்கள் ஏன் பார்த்திபன் தேவையில்லாத வேலையை பார்க்கிறார் என்றும் எதுக்கு இந்த ரிஸ்க் என்றும் பார்த்திபனுக்கு ஆலோசனைகளை வழங்கி வந்தார்கள். ஆனால் தான் எடுத்த முடிவில் பின்வாங்காமல் உறுதியாக இருந்தார் பார்த்திபன்.
சொன்ன தேதியில் இரு படங்களும் ரிலீஸ் ஆக கமல் – சங்கர் கூட்டணி பிரம்மாண்டம் என நினைத்து வழக்கம் போல பெரிய நடிகரை தேடி ரசிகர்களின் கூட்டம் ஓடியது. ஆனால் இந்தியன் 2 படத்தின் ரிசல்ட் முதல் நாளே ரசிகர்களுக்கு தெரிந்து விட்டது. அதே போல் டீன்ஸ் படம் திரையிடப்பட்ட திரையரங்குகளில் முதல் நாள் அந்தளவு கூட்டம் இல்லை.
இந்தியன் 2 படத்தை தொடர்ந்து விமர்சனம் செய்ய அப்படியே மக்கள் டீன்ஸ் திரைப்படத்தை பார்க்க ஆர்வம் காட்டினர். அதற்கேற்றவாறு டீன்ஸ் திரைப்படத்தின் கதை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 100 திரையரங்குகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அடுத்ததாக 200 திரையரங்குகள் என அதிகரித்தன. எதிர்பார்த்தையும் விட டீன்ஸ் படத்தின் ரெஸ்பான்ஸ் அதிகமாகவே இருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் பார்த்திபன் பேட்டி கொடுக்கும் போது அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார். அதாவது ‘என்னை பொறுத்தவரைக்கும் எந்த நடிகரின் படங்களையும் நான் எதிர்மறையாக விமர்சிக்க முடியாது. எல்லா படங்களையும் நான் ரசிக்கத்தான் முடியும். இந்தியன் 2 படத்தை பற்றி நான் தவறாக பேசினேன் என ஒரு பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டிருந்தார்கள். அது என்னவெனில் முதல் நாள் இந்தியன் 2 படத்தின் ரிசல்ட் சரியில்லாததால்தான் அந்தப் படத்தை நான் பார்க்கவே இல்லை என எழுதியிருந்தார்கள் ’
‘ஆனால் நான் சொன்னதே வேற. முதல் நாள் என்னுடைய டீன்ஸ் படம் ஹிட்டானால் இந்தியன் படத்தை பார்ப்பேன்.ஆனால் என் படம் முதல் நாள் அந்தளவு ரீச் ஆகாததால் இன்னும் இந்தியன் படத்தை பார்க்க முடியவில்லை. அதனால் என் படம் ஓடுகிற திரையரங்கை நோக்கி ஒடிக் கொண்டிருக்கிறேன்’ என்றுதான் கூறினாராம். அதனால் அந்த பத்திரிக்கை நிருபர் இதற்கு மன்னிப்பு கேட்டு மறுப்பு செய்தி வெளியிட்டிருந்தாராம்.