Connect with us
parthiban

Cinema History

பெரிய தப்பு பண்ணிட்டேன்!. படம் ஃபிளாப் ஆனதுக்கு அந்த நடிகைதான் காரணம்!.. புலம்பும் பார்த்திபன்!..

ஒரு திரைப்படம் தோல்வி அடைவதற்கு பல காரணங்கள் இருக்கும். கதை சரியாக இல்லாதது, சுவாரஸ்யமான திரைக்கதை இல்லாதது. அந்த கதைக்கு பொருத்தமான ஹீரோ நடிக்காமல் வேறு ஹீரோ நடிப்பது, தவறான காலத்தில் படத்தை ரிலீஸ் செய்வது என பல காரணங்களை கூற முடியும். ஆனால், கதாநாயகியால் ஒரு படம் ஓடாமல் போன கதையைத்தான் இங்கே பார்க்க போகிறோம்.

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை இயக்கி வருபவர் பார்த்திபன். இயக்குனர் பாக்கியராஜிடம் உதவியாளராக பணிபுரிந்து அதன்பின் இயக்குனரானவர். புதிய பாதை திரைப்படம் மூலம் இயக்குனர் மற்றும் நடிகராக தமிழ் சினிமா ரசிகர்களிடம் அறிமுகமானார். அதன்பின் சுகமான சுமைகள், ஹவுஸ்புல், இவன், குடைக்குள் மழை, ஒத்த செருப்பு, இரவின் நிழல் என வித்தியாசமான படங்களை இயக்கியவர்.

இவர் இயக்கிய திரைப்படம்தான் பச்சக்குதிர. இந்த திரைப்படம் 2006ம் ஆண்டு வெளியானது. இந்த படம் மற்றொரு புதிய பாதை படம் போலவே இருக்கும். சேரியில் வசிக்கும் மோசனமான ஒரு மனிதன் ஒரு பெண்ணால் எப்படி நல்லவனாக மாறுகிறான் என்பதுதான் இப்படத்தின் கதை. இந்த படம் ரசிகர்களை கவராமல் தோல்வி அடைந்தது.

சமீபத்தில் ஒரு ஊடகத்தில் பேசிய பார்த்திபன் ‘அந்த படம் தோல்வி அடைந்ததற்கு நமீதா கதாநாயகியாக இருந்ததுதான் காரணம். அது என் தவறுதான். அது ஒரு கனமான கதாபாத்திரம். ஆனால், ரசிகர்களிடம் நமீதா மீது இருந்த இமேஜ் வேறு. அவரை கவர்ச்சி கன்னியாகத்தான் ரசிகர்கள் பார்த்தனர். எனவே, அந்த கதாபாத்திரத்தில் அவர் நடித்ததை ரசிகர்கள் ஏற்கவில்லை’ என பார்த்திபன் பேசியிருந்தார்.

இதையும் படிங்க: லியோ படத்தில் இணையும் விஜய் சேதுபதி!.. அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லயே!….

google news
Continue Reading

More in Cinema History

To Top