தனுஷை வைத்து ஆராய்ச்சி செய்ய நினைத்த பார்த்திபன்… தப்பித்தால் போதும் என ஓட்டம் பிடித்த நடிகர்… இதெல்லாம் நடந்திருக்கா??

by Arun Prasad |
Parthiban and Dhanush
X

Parthiban and Dhanush

கௌரி கிசான், ரோகினி, வினோத் கிசான், மகேந்திரன், கலக்கப்போவது யாரு பாலா ஆகியோரின் நடிப்பில், விரைவில் திரையரங்குகளில் வெளிவரவுள்ள திரைப்படம் “பிகினிங்”. இத்திரைப்படம், ஆசியாவின் முதல் Split Screen திரைப்படமாக வெளிவரவுள்ளது.

Beginning

Beginning

அதாவது பாதி திரையில் ஒரு படம், மீதி திரையில் இன்னொரு படம் என ஒரே நேரத்தில் இரண்டு கதையம்சங்கள் உடைய திரைப்படங்கள் திரையில் தெரியும். ஒரு கட்டத்தில் இந்த இரண்டு திரைப்படங்களின் கதைகளும் ஒரே புள்ளியில் சந்திக்கும். இவ்வாறு ஆசியாவின் புது முயற்சியான “பிகினிங்” திரைப்படத்தை ஜெகன் விஜயா என்பவர் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தை திருப்பதி பிரதர்ஸ் சார்பாக லிங்குசாமி வெளியிடவுள்ளார்.

இத்திரைப்படத்தின் சிறப்பு காட்சி சமீபத்தில் திரையிடப்பட்டது. அப்போது அதில் கலந்துகொண்டு இத்திரைப்படத்தை பார்த்தார் இயக்குனர் பார்த்திபன். தமிழ் சினிமாவில் புதுமைக்கு பெயர் போனவரான பார்த்திபன், “பிகினிங்” திரைப்படத்தை பார்த்து படக்குழுவினரை மிகவும் பாராட்டிப்பேசினாராம்.

Parthiban

Parthiban

அப்போது பார்த்திபன் யாரும் அறியாத ஒரு புதிய தகவலை பகிர்ந்துகொண்டாராம். அதாவது பல வருடங்களுக்கு முன்பு பார்த்திபன், நடிகர் தனுஷிடம் “பிகினிங்” போன்ற Split Screen பாணியிலான ஒரு கதையை கூறினாராம். அந்த கதையை கேட்ட தனுஷ், எந்த முடிவையும் சொல்லாமல் பல மாதங்கள் இழுத்தடித்தாராம். அதன் பின் தனுஷ் இதில் நடிக்க மாட்டார் என பார்த்திபனே முடிவு செய்து அந்த முயற்சியை கைவிட்டுவிட்டாராம்.

Dhanush

Dhanush

மேலும் “ஆடுகளம்” திரைப்படத்தில் பார்த்திபனை நடிக்க வைக்க வேண்டும் என அவரிடம் கதை கூறினாராம் வெற்றிமாறன். ஆனால் பார்த்திபன் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். இந்த தகவலை வலைப்பேச்சு அந்தணன் தனது வீடியோவில் பகிர்ந்துகொண்டுள்ளார்.

Next Story