கால்ஷீட் கொடுக்காத ரஜினி.. கடுப்பான தயாரிப்பாளர்!.. பார்த்திபன் ஹீரோ ஆனது இப்படித்தான்!..
திரையுலகை பொறுத்தவரை யாருக்கு எப்போது யார் மூலம் வாய்ப்பு கிடைக்கும் என சொல்லவே முடியாது. பல வருடங்கள் ஒரு கதையை வைத்துக்கொண்டு தயாரிப்பு நிறுவனங்களின் படிக்கெட்டில் ஒரு இயக்குனர் ஏறி இறங்குவார். ஒரு கட்டத்தில் வெறுப்பாகி முயற்சியையே நிறுத்திவிடுவார். அப்போது ஒரு தயாரிப்பாளரிடம் இருந்து அவருக்கு அழைப்பு வரும். இப்படி பலரும் இயக்குனராகியுள்ளனர்.
சில சமயம் நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுப்பார்கள். சில சமயம் மற்ற ஹீரோக்கள் மீது கோபம் கொண்டு ஒரு புதிய ஹீரோ உருவாகுவார். இதுவும் திரையுலகில் நிறைய நடந்ததுண்டு. ஒரு ஹீரோவுடன் சண்டை போட்டுக்கொண்டு சினிமாவை பற்றி ஒன்றுமே தெரியாதை ஒருவரை ஒரு இயக்குனர் ஹீரோ ஆக்குவார். சூர்யா கூட அப்படி வந்தவர்தான்.
ரஜினி பெரிய ஹீரோவாக உருவெடுத்த போது அவரை வைத்து படம் எடுக்க பல தயாரிப்பாளர்களும் ஆசைப்பட்டனர். இதில், ஓரிரு படம் எடுத்தவர்களும் உண்டு. ஆனால், ரஜினியால் எல்லோருக்கும் கால்ஷீட் கொடுக்க முடியவில்லை.
சரி விஷயத்திற்கு வருவோம்!. பார்த்திபன் பாக்கியராஜிடம் உதவியாளராக இருந்துவிட்டு வெளியே வந்து படம் எடுக்க முயன்றபோது அவரை நம்பி யாரும் நடிக்க முன்வரவில்லை. இதுபற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ள பார்த்திபன் ‘பிரபு, அர்ஜூன், மோகன் என பல நடிகர்களின் பின்னால் அலைந்தேன். ஒரு கட்டத்தில் நானே நடித்துவிடுவது எனவும் முடிவு செய்தேன். அந்த நேரத்தில்தான் பாபுஜி என்கிற ஒரு தயாரிப்பாளர் என்னிடம் வந்தார்.
அவர் ரஜினியை வைத்து கர்ஜனை என்கிற படத்தை கூட தயாரித்திருந்தார். அவர் என்னிடம் ‘ரஜினியிடம் கால்ஷீட் கேட்டு அலைகிறேன். ஆனால், நடக்கவில்லை. பேசாமல் நீயே ஹீரோவாக நடி. நான் தயாரிக்கிறேன். உன்னிடம் கதை இருக்கிறதா? எனக் கேட்டார். அதன்பின் ஒருவாரத்தில் புதிய பாதை கதையை தயார் செய்தேன். அந்த படத்தில் கமலை நடிக்க வைக்கவும் முயற்சி செய்தேன். ஆனால், நடக்கவில்லை. எனவே, நானே நடித்துவிட்டேன். இப்படித்தான் புதிய பாதை உருவானது’ என பார்த்திபன் பேசியிருந்தார்.
இதையும் படிங்க: அஜித் சொன்னதை செய்யாத இயக்குனர்!. டேக் ஆப் ஆகுமா ஏகே 62!.. பரபரப்பான அப்டேட்!..