Connect with us
parthiban

Cinema News

டோட்டல் வாஷ் அவுட்! 100 நாள் ஓட வேண்டிய படம்! தயாரிப்பாளரை நடுத்தெருவுக்கு கொண்டு வந்த பார்த்திபன்

திரைத் துறையில் வார்த்தை வித்தகன் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் நடிகர் பார்த்திபன். ஒரு நடிகராக இயக்குனராக பல படங்களில் தன்னுடைய ஆளுமையை காட்டியவர். பார்த்திபன் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து அதன் பிறகு இயக்குனரானார். கூடவே ஒரு சில படங்களில் துணை நடிகராக நடித்து அதன் பிறகு ஒரு முதன்மை நடிகராக தன்னை பிரதிபலித்துக் கொண்டார்.

parthiban1

parthiban1

புதியபாதை, உள்ளே வெளியே, ஒத்த செருப்பு, குடைக்குள் மழை, வித்தகன், ஹவுஸ் ஃபுல் போன்ற படங்களை பார்த்திபன் இயக்கி அவரே நடிக்கவும் செய்தார். புதியபாதை படத்திற்கு சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதையும் பெற்றார். சேரன் இயக்கத்தில் பார்த்திபன் நடித்த பாரதிகண்ணம்மா திரைப்படத்திற்காக சிறந்த தமிழ் நடிகருக்கான தமிழக அரசின் விருதையும் பெற்றார்.

இவருடைய ஒரு சில படங்கள் வணிக ரீதியாக வெற்றி தராவிட்டாலும் கதை திரைக்கதை அடிப்படையில் மாநில அரசின் விருது போன்ற ஒரு சில விருதுகளை பெற்றவையாகவே இருக்கும். அந்த வகையில் ஒத்த செருப்பு திரைப்படம் சிறந்த திரைப்படத்திற்கான ஜூரி விருதையும் சிறந்த இயக்குனருக்கான ஜூரி விருதையும் சிறந்த தனி நடிப்பிற்கான விருதையும் ஆகிய விருதுகளில் பார்த்திபன் தன்னை பெருமை படுத்திக் கொண்டார்.

இந்த நிலையில் அவர் இயக்கி நடித்த படமான வித்தகன் திரைப்படத்தைப் பற்றி அந்தப் படத்தின் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் சில தகவல்களை நம் இடையே பகிர்ந்து இருக்கிறார். 2011 ஆம் ஆண்டு வெளியான வித்தகன் திரைப்படத்தை பார்த்திபனே இயக்கி அவரே நடிக்கவும் செய்தார்.

parthiban2

parthiban2

அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பூர்ணா நடித்தார். இந்தப் படம் துணிச்சல் கொண்ட ஒரு போலீஸ் அதிகாரியின் கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படமாக அமைந்தது. இதில் பார்த்திபன் போலீசாக நடித்தார். ஆனால் இந்த படம் வெளியாகி மிகவும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. பாக்ஸ் ஆபிஸிலும் பெரிய அடியை வாங்கியது.

இந்தப் படத்தின் தோல்வி குறித்து பேசிய தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் “படம் எடுப்பதற்கான செலவை பற்றி நான் என்றைக்குமே கவலை கொண்டது இல்லை. ஒரு படத்தை படமாக்க என்னென்ன செலவுகள் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்து விடுவேன். இந்த வித்தகன் திரைப்படத்தை ஆஸ்திரியா, செக் குடியரசு, வியன்னா போன்ற பல நாடுகளில் படமாக்கினோம். ஆனால் கண்டண்டு விஷயத்தில் நான் தவறவிட்டேன். அது அவர்களுடைய அலட்சிய போக்கு. ஒரு வேளை இந்த படத்தில் பார்த்திபன் நடிக்காமல் அர்ஜுன் அல்லது கார்த்திக் நடித்திருந்தால் படம் 100 நாள் ஓடி இருக்கும். பார்த்திபன் நடித்தது தான் மிகப்பெரிய தவறு” என்று மாணிக்கம் நாராயணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க : கவுண்டமணி ஒருத்தரையும் விடமாட்டாரு!. நம்பி மோசம் போயிட்டேன்.. கதறும் காமெடி நடிகை…

google news
Continue Reading

More in Cinema News

To Top