Connect with us

படம் பாக்க வந்தவங்களுக்கு கடைசில அத காட்டுன பார்த்திபன்…! திக்குமுக்காடிய திரைப்பிரபலங்கள்…

par_main_cine

Cinema News

படம் பாக்க வந்தவங்களுக்கு கடைசில அத காட்டுன பார்த்திபன்…! திக்குமுக்காடிய திரைப்பிரபலங்கள்…

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் அண்மையில் இரவின் நிழல் என்ற படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் அமைந்த இந்த படத்தை சமீபத்தில் பார்த்திபன் அவருக்கு நெருங்கிய நண்பர்களான சில இயக்குனர்களுக்கு மட்டும் படத்தைப் போட்டு காட்டியுள்ளார். படத்தை பார்த்து பிரமிப்பில் இருந்துள்ளனர்.

par1_cine

மேலும் இந்த படம் சிங்கிள் ஸார்ட்டில் எடுத்த படமாம்.ஆனால் இந்த படத்தை பார்த்தவர்கள் இது சிங்கிள் ஸார்ட்டில் எடுத்த படமாக இருக்காது என கூறினார்களாம். கின்னஸ் நிறுவனமும் இது அப்படி எடுத்த படமாக இருக்காது என கூறியுள்ளனர்.

par2_cine

படத்தில் 6 பாடல் காட்சிகள் இருக்கின்றன. சிங்கிள் ஸார்ட்டில் எடுத்த படமாக இருந்தால் பாடல் காட்சி எப்படி சாத்தியமாகும் என யோசித்தனராம். வேறு வழியில்லாமல் பார்த்திபன் படத்தின் மேக்கிங் வீடியோவையும்
போட்டு காட்டியுள்ளார்.

par3_cine

கடைசியில் அதை பார்த்துதான் எல்லாரும் நம்பினார்களாம். இரண்டு வருடங்களாக பார்த்திபன் இதற்காக ரொம்பவும் கஷ்டப் பட்டிருக்கிறார் போல. அதன் பலன் தான் இந்த படம் என பார்த்த அனைவரும் அவரை வாழ்த்தியுள்ளனர். தமிழ் சினிமாவில் முக்கிய தாக்கத்தை இந்த படம் கண்டிப்பாக ஏற்படுத்தும் எனவும் கூறியுள்ளனர்.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top