மனிதாபிமானம் இல்லாத ஆளு மணிரத்னம்...! சரத்குமாருக்கு நடந்த கொடுமையை வெளிச்சம் போட்டு காட்டிய பார்த்திபன்...

தமிழ் சினிமாவில் காதலையும் சரி உணர்வுகளையும் சரி ஒப்பிட்டு கூற முடியாத அளவிற்கு தன்னிச்சையாக காட்டக்கூடியவர் இயக்குனர் மணிரத்னம். இவரின் படைப்புகள் எண்ணிலடங்கா. ஆக்ஷன் படங்களாக இருக்கட்டும், காதலை மையமாக கொண்ட படங்களாக இருக்கட்டும் அதில் உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர் மணிரத்னம்.
தான் நினைத்ததை அடையும் வரை நடிகர்களை விடமாட்டார். தத்ரூபமாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருக்கக் கூடியவர். இவரின் படைப்பில் வருகிற 30 ஆம் தேதி பல நட்சத்திரங்கள் ஒன்று கூடி நடித்திருக்கும் படமான பொன்னியின் செல்வன் திரைக்கு வரவிருக்கிறது.
இதையும் படிங்கள் : மீண்டும் ஹீரோ!..அடுத்த சந்தானம் ஆகிறாரா நடிகர் சூரி!..பாத்து செய்யிங்க பாஸ்!..
ஏராளமான முன்னனி நட்சத்திரங்கள் நடித்திருக்கக்கூடிய அந்த படத்தை பற்றி அதில் நடித்த பிரபலங்கள் தங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். இதில் நடிகர் பார்த்திபன் மணிரத்னம் பற்றி யாரும் அறியாத சில தகவலை கூறினார். அதாவது மணிரத்னம் மனிதாபிமானம் இல்லாத ஆளு என்று தெரிவித்துள்ளார்.
ஏனெனில் இந்த படத்தில் நடித்திருக்கும் எல்லா நடிகர்களிடமும் அதிக வேலையை வாங்கியுள்ளார். அவர் நினைக்கும் காட்சிகள் வரும் வரை யாரையும் விடமாட்டார். ஒரு சமயம் நானும் சரத்குமாரும் சேர்ந்து நடிக்கும் காட்சி அது.சூர்யன் உதயமாகும் நேரத்தில் அந்த காட்சி படமாக்கப்பட்டது. அப்போது திடீரென சரத்குமாருக்கு காலில் தொய்வு ஏற்பட்டு நொண்டி நொண்டி நடந்துள்ளார். ஆனால் மணிரத்னம் ஒன் மோர் டேக் கேட்டுள்ளார். அப்போது சரத் சார் நடக்க முடியவில்லை என்று கூற மணிரத்னம் ஓ அப்படியா நீங்கள் நிஜமாகவே அப்படி நடிக்கிறீர்கள் என்று நினைத்தேன் என்று சொல்லி மறுபடியும் ஒன் மோர் டேக் கேட்டுள்ளார் மணிரத்னம்.