‘லியோ’ பார்த்திபனை நிஜ பார்த்திபனாக மாற்றிய ரசிகர்கள்! புகைப்படத்தை பார்த்து பார்த்திபன் கொடுத்த ரிப்ளை

Leo : நடிகர் விஜயின் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் லியோ. இந்தப் படத்தை லோகேஷ் இயக்க அனிருத் இசையில் படம் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார்.

பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான லியோ திரைப்படம் மக்களை அந்தளவுக்கு திருப்திப் படுத்தவில்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏகப்பட்ட விமர்சனங்களோடு படம் இன்னமும் ஓடிக் கொண்டுவருகிறது. லோகேஷ் எங்களையெல்லாம் ஏமாற்றிவிட்டார் என்று சொல்லாத ரசிகர்களே இல்லை.

இதையும் படிங்க: லியோ வசூல் 500 கோடி தான்… ஆனா தளபதியை அசிங்கப்படுத்த களமிறங்கிய போட்டி நடிகர்..!

படத்தில் பார்த்திபனாக தன் குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் விஜயை லியோ என நினைத்து ஒரு கும்பல் விஜயை தேடிவருகிறது. இப்படியாக ஆரம்பிக்கும் கதையில் பார்த்திபன் தான் லியோவா என கடைசி வரைக்கும் சஸ்பென்ஸ்ங்கிற பேர்ல ரசிகர்களை போட்டு பைத்தியமா ஆக்கிருப்பாரு லோகேஷ்.

லியோ படத்தை ட்ரோல் செய்யாத ரசிகர்களே இல்லை. படம் ரிலீஸாகி கிட்டத்தட்ட 10 நாள்களை தொடும் நிலையில் இன்னும் அந்தப் படத்தை வச்சு செய்து வருகிறார்கள் ரசிகர்கள். இந்த நிலையில் லியோவில் பார்த்திபன் கதாபாத்திரத்தில் விஜய் நிறைய தலைமுடியுடன் பார்ப்பதற்கு மிகவும் ஸ்டைலிஷாக இருப்பார்.

இதையும் படிங்க: நான் தூக்கி குளிப்பாட்டிய குழந்தை விஜய்! இப்போ பாக்க முடியாம கஷ்டப்படுறேன் – கண்கலங்கி பேசிய அந்த பிரபலம்

அவர் புகைப்படத்தில் நடிகர் பார்த்திபனின் முகத்தை சொருவி ரசிகர்கள் அதையும் கலாய்த்து வருகிறார்கள். அதை பார்த்த நடிகர் பார்த்திபன் விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார். இப்படியெல்லாம் கூடபண்ணமுடியுமானு ஆச்சரியமாக இருக்கிறது என்றும் பதிலுக்கு பதிவிட்டிருக்கிறார்.

இன்னும் என்னெல்லாம் பண்ண காத்துக் கொண்டிருக்கிறார்களோ என்று இணையமே கதிகலங்கி போய் கிடக்கின்றது.

இதையும் படிங்க: நான் தூக்கி குளிப்பாட்டிய குழந்தை விஜய்! இப்போ பாக்க முடியாம கஷ்டப்படுறேன் – கண்கலங்கி பேசிய அந்த பிரபலம்

 

Related Articles

Next Story