என் குடும்பத்தை தவிர எந்த குடும்பமும் அந்த படத்த பாக்கல...! ஆதங்கத்தை கொட்டி தீர்த்த பார்த்திபன்...
அக்கா குருவி திரைப்படம். 8 பேர் இணைந்து தயாரிக்கும் படம் இசைஞானி இசையில் வெளிவரும் படம். இப்படத்தின் ஆடியோ லான்ச் அணமையில் நடைபெற்றது. அப்போது நடிகர் அமீர், நடிகர் பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்படத்தின் இசைவெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் பார்த்திபன் நல்ல படம் ஒழுக்கமான படம் எடுத்தால் மக்களுக்கு பிடிக்காது எனக் கூறினார். மேலும் நான் சுகமான சுமைகள் என்னும் குடும்பபாங்கான படத்தை எடுத்தேன் அனைவரும் குடும்பத்தோடு வந்து பாக்கனுனு ஆனால் என் குடும்பத்தை தவிர எந்த குடும்பமும் வந்து படத்தை பாக்கல.
அந்த படத்தால் எனக்கு 75 லட்சம் நஷ்டம் எனக் கூறினார். அதன் விளைவுதான் உள்ளே வெளியே படத்தை இயக்கியது. அந்த படம் எனக்கு வெற்றி பெற்றது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒத்த செருப்பு என்னும் படத்தை இயக்கினார். அந்த படம் ஆஸ்கார் வரை சென்றது. மேலும் பல விருதுகளை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.