Connect with us

உலகப் புகழ் முன்னாடி அநாகரிகமாக நடந்து கொண்ட பார்த்திபன்…! அப்செட்டில் அந்த பிரபலம்..

par_main_cine

Cinema News

உலகப் புகழ் முன்னாடி அநாகரிகமாக நடந்து கொண்ட பார்த்திபன்…! அப்செட்டில் அந்த பிரபலம்..

நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் அண்மையில் இரவின் நிழல் என்ற படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் அமைந்த இந்த படம் ரசிகர்கல் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ரசிகர்கள் மட்டுமில்லாது திரைப்பிரபலங்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

par1_cine

இந்த படத்தை சமீபத்தில் பார்த்திபன் அவருக்கு நெருங்கிய நண்பர்களான சில இயக்குனர்களுக்கு மட்டும் படத்தைப் போட்டு காட்டியுள்ளார். படத்தை பார்த்து பிரமிப்பில் இருந்துள்ளனர். மேலும் இந்த படம் சிங்கிள் ஸார்ட்டில் எடுத்த படமாம்.

par2_cine

படத்தில் 6 பாடல் காட்சிகள் இருக்கின்றன. ஏ.ஆர்.ரகுமான் இசையில் அமைந்துள்ளதால் இன்னும் எதிர்பார்ப்பு அதிகமாகவே இருக்கின்றது. அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில் ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டார். விழாவில் பார்த்திபன் பேசும் போது மைக் வேலை செய்யவில்லை.

par3_cine

உடனே கோபப்பட்டு மைக்கை ரகுமான் முன்னாடியே தூக்கி முன்னாடி இருப்பவர்கள் மீது வீசினார். இது உடனே சொல்லமாட்டீர்களா? என சத்தம் போட்டார். மைக் சரியானதும் மீண்டும் பேசும்போது தான் செஞ்சது அநாகரிகமான செயல். இதற்கு வருத்தப்படுகிறேன் என மன்னிப்பு கேட்டார். இதை பார்த்துக் கொண்டிருந்த ரகுமானின் முகம் ஏண்டா வந்தோம் என யோசிக்க வைத்தது போல் மாறிவிட்டது.

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top