நான் கஷ்டப்பட்டு காச புரட்டி படம் எடுத்தா... நீங்க நோகாம நொங்கு திம்பீங்களா?!.. கார்த்தியிடம் எகிறிய அமீர்!..

by sankaran v |   ( Updated:2023-11-24 11:12:03  )
Karthi, Ameer, Surya
X

Karthi A S

அமீர், கார்த்தி, சூர்யா பிரச்சனைகள் பற்றி அவ்வப்போது செய்திகள் உலாவியில் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. தற்போது பிரச்சனைக்கான காரணம், நடந்த முழுவிவரம் என்ன என்பதை இங்கு வலைப்பேச்சு அந்தனன் தெரிவித்துள்ளார்.

மௌனம் பேசியதே படம் பண்ணிய பிறகு அமீர், சூர்யாவை வைத்து ஒரு படம் பண்ணனும்னு நினைக்கிறார். அதற்குள் சூர்யாவுக்கும், பாலாவுக்கும் நெருங்கிய நட்பு உருவாகி விடுகிறது.

அப்படின்னா பாலாவுக்காக அமீர் படத்துல நடிக்க வேண்டாம்னு சூர்யா நினைக்கிறார். இதுதான் நடந்த விஷயம். சூர்யாவோட டேட் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை. அவரது தம்பி கார்த்தியை வைத்து நான் படம் எடுக்கிறேன். எனக்கு திறமை இருக்கு என்கிறார் அமீர்.

கார்த்தியை நடிக்க அழைக்கிறார் அமீர். முதலில் அந்தப் படத்தை அவங்களே தயாரிக்கிற முடிவுக்கு வர்றாங்க. அப்போது தான் ஸ்டுடியோ கிரீன் என்ற பெயரையே சிவகுமார் சொல்கிறார். இதற்கு சரி என்று சம்மதித்து படத்தோட சூட்டிங் ஆரம்பித்தது. ரூ.2.25 கோடி வரை முதலீடும் செய்யப்பட்டு சூட்டிங் தொடர்ந்து நடந்து வருகிறது.

திடீரென ஒருநாள் எதுவும் சொல்லாமல் ஞானவேல் ராஜா பணம் கொடுப்பதை நிறுத்தி விடுகிறார். போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால் மீதி படம் இன்னும் 65 நாள் எடுக்க வேண்டியுள்ளது.

அமீருக்கு என்ன பண்றதுன்னே தெரியல. போன் பண்றாரு. ஆனால் எதற்குமே சிவகுமார் குடும்பம் உள்ள வரவே இல்லை. இப்ப என்ன பண்றதுன்னு அமீர் நினைக்கிறார். அப்போது சசிக்குமாரோட நண்பர் அசோக்குமார் மூலமாக கிட்டத்தட்ட ரூ.1.65 கோடி வருகிறது. இந்தப் பணத்தைக் கொண்டு 63 நாள்களில் மீதிப்படத்தை எடுத்து முடிக்கிறார். 64வது நாளில் சென்னையில் பிரபல நாளிதழில் பருத்தி வீரன் விரைவில் வெளியீடு என்று விளம்பரம் வருகிறது. அதுவும் ஸ்டூடியோ கிரீன் என்ற பெயருடன் வருகிறது.

அதுக்கு முன்னாடி லேப்லெட்டர், நெகடிவ் எல்லாமே அமீரோட கம்பெனி பேருல இருக்கு. விளம்பரத்தைப் பார்த்துட்டு கார்த்தியிடம் அமீர் சத்தம் போடுகிறார். நான் வந்து போராடி உருண்டு புரண்டு பணத்தைப் புரட்டிப் படத்தை எடுப்பேன். நீங்க கூசாம வந்து அந்தப் படத்தை எடுத்துட்டுப் போக ட்ரை பண்றீங்களா?

Paruthi veeran

PV1 2

இதைக் கேட்ட உடனே அமீரைப் பார்த்து பிரச்சனையைத் தீர்க்க சூர்யா உடனடியா கிளம்பி மதுரைக்குப் போகிறார். விடிய விடிய பேச்சுவார்த்தை நடக்கிறது. ஏதோ நடந்தது நடந்து போச்சு. நீங்க இவ்ளோ பணத்தை உள்ளே போட்டுருக்கீங்க. நான் ஒங்களுக்கு 1 கோடி ரூபாய் கடனா தாரேன். நீங்க போஸ்ட் புரொடக்ஷன் வேலை எல்லாம் முடிச்சிட்டுப் படத்தை ரிலீஸ் பண்ற வழியைப் பாருங்கன்னு சொல்லிட்டு கிளம்பிட்டாரு. சொன்னபடி பணமும் கொடுக்கப்படவில்லை.

மீண்டும் பேசிப் பேசி 30 லட்ச ரூபாய் அமீருக்குத் தரப்பட்டது. அப்புறம் போஸ்ட் புரொடக்ஷன் வேலை எல்லாம் முடிஞ்சதும் அமீரை கவுன்சிலிங் பண்ணி மிரட்டி எழுதி வாங்கிட்டாங்க. கடைசில அமீர் போராடி வாங்கினது மதுரை ஏரியா. அதுக்கு அப்புறம் ஒரு பைசா கூட அமீருக்கு வரல. படம் மிகப்பெரிய ஹிட். மிகப்பெரிய லாபம்.

மேற்கண்ட தகவலை வலைப்பேச்சு அந்தனன் தெரிவித்துள்ளார்.

Next Story