More
Categories: Cinema News latest news

பருத்திவீரன் லாரியால் ஏற்பட்ட சர்ச்சை…. பிரபல அரசியல்வாதியை வம்புக்கு இழுக்கும் அமீர்… இவ்வளவு ஓப்பனாவா பேசுறது..!!

கடந்த 2007 ஆம் ஆண்டு கார்த்தி, பிரியாமணி ஆகியோரின் நடிப்பில் அமீர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் “பருத்திவீரன்”. இத்திரைப்படம் அந்த வருடத்தின் மிகச்சிறந்த வெற்றித் திரைப்படமாக திகழ்ந்தது.

இத்திரைப்படத்தில் தனது யதார்த்த நடிப்பை வெளிப்படுத்திய பிரியாமணிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது. அதே போல்  இத்திரைப்படத்தின் படத்தொகுப்பாளருக்கு சிறந்த படத்தொகுப்பிற்கான தேசிய விருதும் கிடைத்தது.

Advertising
Advertising

Paruthiveeran

மேலும் “பருத்திவீரன்” திரைப்படத்திற்கு ஆறு பிலிம்ஃபேர் விருதுகளும், மூன்று மாநில விருதுகளும் கிடைத்தன. அதே போல் இரண்டு சர்வதேச விருதுகளும் கிடைத்தன. இவை உட்பட பல விருதுகள் “பருத்திவீரன்” திரைப்படத்திற்கு கிடைத்தது.

இவ்வாறு தமிழின் மிக முக்கியமான படைப்பாக திகழும் “பருத்திவீரன்” திரைப்படத்தில் கார்த்தியின் பிளாஸ் பேக்கில், ஜாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட கார்த்தியின் பெற்றோரை ஒரு லாரி இடித்து கொள்வதுபோல ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். அந்த லாரியின் மேல் ராமதாஸ் என்று எழுதப்பட்ட ஒரு பெயர் பலகையும் இடம்பெற்றிருக்கும்.

Paruthiveeran

சமீப காலமாக இணையத்தில் பலரும் அந்த காட்சியை  பிரபல அரசியல் கட்சித் தலைவர் ஒருவரின் பெயருடன் தொடர்புபடுத்தி பேசத்தொடங்கினர். இதனால் இணையத்தில் பல சர்ச்சைகள் எழுந்தது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் அமீரிடம் “பருத்திவீரன் படத்தில் அந்த லாரியின் மேல் ராமதாஸ் என்ற பெயர் இடம்பெற்றிருந்தது தற்செயலா? அல்லது அதற்கு பின் எதுவும் காரணம் இருக்கிறதா?” என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

இதையும் படிங்க: “அது மட்டும் நடக்கலைன்னா என் ஆசை நிறைவேறியிருக்கும்”… ரஜினியின் மாஸ் ஹிட் படத்தால் வேதனையில் ஆழ்ந்த தயாரிப்பாளர்…

Ameer

அதற்கு அமீர் “நாங்கள் திட்டமிட்டு அப்படி ஒரு பெயர் இருக்கும் லாரியை கொண்டு வாருங்கள் என கூறவில்லை. ஆனால் தற்செயலாக  அப்படி ஒரு லாரி வந்தது. நாங்கள் அந்த பெயரை பார்த்தோம். பார்த்தவுடன் நன்றாக இருந்தது. ஆதலால் ஏற்றுக்கொண்டோம்” என்று அப்பேட்டியில் கூறியிருக்கிறார்.

Published by
Arun Prasad

Recent Posts