Connect with us

Cinema News

பருத்திவீரன் வெற்றியை மறந்தாரா கார்த்தி…? சித்தப்பா செவ்வாழையை நிராகரித்த பின்னணி என்ன?

தமிழின் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் கார்த்தி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிய திரைப்படம் “பருத்திவீரன்”. தனது முதல் திரைப்படத்திலேயே கிராமத்தில் லந்து செய்யும் சண்டித்தனமான ஆளாக தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் கார்த்தி.

மேலும் இத்திரைப்படத்தில் செவ்வாழை என்ற கதாப்பாத்திரத்தில் சரவணன் நடித்திருந்தார். திரைப்படத்தில் சரவணனும் கார்த்தியும் சேர்ந்து செய்யும் ரகளை பார்வையாளர்களை சுவாரசியப்படுத்தியது.

இதனை தொடர்ந்து கார்த்தி “ஆயிரத்தில் ஒருவன்”, “பையா”, “சிறுத்தை”, “கைதி” என பல வெற்றித் திரைப்படங்களில் நடித்தார். தற்போது “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் கார்த்தி நடித்துள்ளார்.

அதே போல் சமீபத்தில் கார்த்தி, அதிதி ஷங்கர் ஆகியோரின் நடிப்பில் “விருமன்” திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தை முத்தையா இயக்கியிருந்தார். மேலும் பிரகாஷ் ராஜ், சரண்யா பொன்வண்ணன், கருணாஸ், ராஜ்கிரண் ஆகியோர் நடித்திருந்தனர்.

கருணாஸ் இத்திரைப்படத்தில் கார்த்திக்கு உறவினராக நடித்திருப்பார். மிகவும் முக்கிய கதாப்பாத்திரமான இக்கதாப்பாத்திரத்திற்கு முதலில் சரவணனைத்தான் இயக்குனர் தேர்வு செய்தார் என கூறப்படுகிறது.

“பருத்திவீரன்” திரைப்படத்தில் இவர்கள் இருவரின் காம்போ நன்றாக இருந்ததாகவும் ஆதலால் இத்திரைப்படத்திலும் சரவணனை நடிக்கவைப்பதாகவும் இயக்குனர் நினைதிருந்தாராம். ஆனால் இதனை கார்த்தியிடம் கூறியபோது சரவணன் வேண்டாம், வேறு யாரையாவது இக்கதாப்பாத்திரத்தில் நடிக்க வையுங்கள் என கூறிவிட்டாராம். ஆதலால் தான் இக்கதாப்பாத்திரத்தில் கர்ணாஸ் நடித்தாராம்.

“பருத்துவீரன்” திரைப்படம் வெற்றி அடைந்ததற்கான முக்கிய காரணங்களில் ஒன்று கார்த்தி-சரவணன் காம்போ. “என்ன சித்தப்பா”, “என்ன மகனே” என திரைப்படத்தில் இவர்கள் பேசும் பாஷையே மிகவும் ரசிக்கவைத்தது. ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, கார்த்தி “விருமன்” திரைப்படத்தில் அவர் நடிப்பதற்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார். இவர்கள் இருவருக்கும் அப்படி என்னதான் பிரச்சனையோ?

 

google news
Continue Reading

More in Cinema News

To Top