தல அஜித் போலீஸ் வேடத்தில் நடித்து கடந்த 2015ல் வெளியான படம் ‘என்னை அறிந்தால்’. இதில் அஜித்துக்கு நிகரான வில்லன் பாத்திரத்தில் நடித்தவர் நடிகர் அருண் விஜய். நீண்ட இடைவேளைக்குப் பின் அருண் விஜய்க்கு மிகப்பெரிய வெற்றிபெற்ற படம் இதுவாகும்.
இதில் அருண் விஜய்யின் மனைவியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை பார்வதி நாயர். இதில் வில்லத்தனமான வேடத்தில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். இப்படத்திற்கு முன்னதாகவே மலையாளத்தில் பல படங்களில் நாயகியாக இவர் நடித்துள்ளார்.
அபு தாபியில் மலையாள குடும்பத்தில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர் மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார். பின்னர் அதன்மூலமாக மலையாள சினிமாவில் நுழைந்தார்.

என்னை அறிந்தால் படத்திற்குப் பின் இவர் நடிப்பில் உத்தம வில்லன், மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக, எங்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ள ராஜா மற்றும் சீதகாதி ஆகிய படங்கள் வெளியானது. ஆனால் இதில் எந்த படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.
சமீபகாலமாக இவர் சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது மிகவும் டைட்டான வெள்ளை உடையில் இருக்கும் கவர்ச்சி படத்தை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.
