Categories: Entertainment News

சிக்குன்னு நிக்குற.. சில்லுன்னு இருக்கு!… பளபள உடையில் பார்வதி நாயர்….

பல திரைப்படங்களில் நடித்தும் சரியான வாய்ப்பு இல்லாமல் இருந்த நடிகர் அருண் விஜய்க்கு மறுவாழ்க்கை கொடுத்த திரைப்படமான ‘என்னை அறிந்தால்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். இப்படத்தை கௌதம் மேனன் இயக்க அஜித், திரிஷா, அனுஷா, விவேக் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். அதன்பின்,‘நிமிர்’, ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்து வந்த இவர் மாடலிங் துறையின் மீதுள்ள ஆர்வத்தால் அதில் நுழைந்தார்.

சில வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர் எதிர்பார்த்தது போல் முன்னணி நடிகையாக முடியவில்லை. நல்ல வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. எனவே, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.

இதையும் படிங்க : இது மிட் நைட் மசாலா!.. சிக்குன்னு போஸ் கொடுத்த விஜே பார்வதி…

அதிலும் சமீப காலமாக அவர் பகிறும் புகைப்படம் தாறு மாறு தக்காளி சோறாக இருக்கிறது.

இந்நிலையில், பளபள உடையில் அங்கங்களை பளிச்சென காட்டி அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சுண்டி இழுத்துள்ளது.

Published by
சிவா