ஒத்த போட்டோவில் நடிகைகளை ஓரம் கட்டிய அஜித் பட நடிகை...
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித், திரிஷா, அருண் விஜய், அனுஷ்கா, விவேக் உள்ளிட்ட பலரும் நடித்த திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. இப்படம் மூலமாகத்தான் நடிகர் அருண் விஜய்க்கு மறுவாழ்க்கை கிடைத்தது. இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் பார்வதி நாயர். அதன்பின், உதயநிதி ஸ்டாலின்‘நிமிர்’, பார்த்திபன் இயக்கிய ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.
தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் சில மலையாள திரைப்படங்களிலும் நடித்துள்ளார். அபு தாபியில் பிறந்த இவர் சாஃப்ட்வேர் என்ஜினியராக பணிபுரிந்தார். ஆனால், மாடலிங் துறையின் மீது இருந்த ஆர்வத்தில் திரையுலகில் நுழைந்தார்.
சில வாய்ப்புகள் கிடைத்தாலும் அவர் எதிர்பார்த்தது போல் முன்னணி நடிகையாக முடியவில்லை. நல்ல வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. எனவே, சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து நெட்டிசன்களை கிறங்கடித்து வருதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார். அதிலும் சமீப காலமாக அவர் பகிறும் புகைப்படம் தாறு மாறு தக்காளி சோறாக இருக்கிறது.
இந்நிலையில், கடற்கரையில் வாளிப்பான உடலை காட்டி அவர் பகிர்ந்துள்ள போஸ் நெட்டிசன்களை கிறங்கடித்துள்ளது.