தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை ஒரு இயக்குனர் ஒரு ஹீரோவை வைத்து படம் இயக்கும் வேலையில் இருந்தாலும் ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற நடிகர்களின் படங்களை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் உடனே அந்த படத்திற்கு சென்று விடுவார்கள். ஏனெனில் அவர்கள் பெரிய நடிகர்கள்.. அவர்களை வைத்து படமெடுத்தால் ரசிகர்களிடம் நாமும் பிரபலம் ஆகிவிடுவோம்..
திரையுலகில் தனது இமேஜ் உயர்வதோடு சம்பளமும் உயர்ந்து விடும். இதில் சம்பளம் மட்டும் இல்லை.. ரஜினி, விஜய் அஜித் போன்ற நடிகர்களை வைத்து படமெடுக்கும் ஆசை பலருக்கும் இருக்கும். ஏனெனில், அவர்களின் படங்களை பார்த்து வளர்ந்துள்ள இளம் இயக்குனர்கள் பலரும் அவர்களின் ரசிகர்களாகவே இருப்பார்கள்.
எனவே அப்படி ஒரு வாய்ப்பு வரும்போது கண்டிப்பாக எப்படிப்பட்ட படமாக இருந்தாலும் அதை விட்டுவிட்டு சென்று விடுவார்கள். தற்போது சிபி சக்கரவர்த்தியும் இதையேதான் செய்திருக்கிறார். 2022ம் வருடம் சிவகார்த்திகேயனை வைத்து சிபிச் சக்கரவர்த்தி இயக்கிய டான் திரைப்படம் வெளியாகி நூறு கோடி வசூலை பெற்றது. அதன்பின் கடந்த மூன்று வருடங்களாகவே சிபி சக்கரவர்த்தி எந்த படத்தையும் இயக்கவில்லை.

ரஜினியிடம் ஒரு கதை சொல்லி லைக்கா தயாரிப்பில் அந்த படத்தை சிபி இயக்குவதாக இருந்தது. ஆனால் ரஜினி அதிலிருந்து பின் வாங்கவே அது டேக் ஆப் ஆகவில்லை. அதன்பின் மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்கும் வேலையில் சிபி இறங்கினார். அந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் சுதன் தயாரிப்பதாக முடிவானது.
இந்த படத்திற்காக வருடத்திற்கும் மேல் காத்திருந்தார் சிபி சக்கரவர்த்தி. ஆனால் படத்திற்கு தேவையான பணத்தை தயாரிப்பாளரால் ஏற்பாடு செய்ய முடியவில்லை. எனவேதான் அந்த படம் டேக் ஆப் ஆகாமல் இருந்தது. இந்த நிலையில்தான் ரஜினி பட வாய்ப்பு வந்ததும் அங்கு சென்று விட்டார் சிபி சக்கரவர்த்தி.
இதில் சிவகார்த்திகேயனுக்கு பெரிதாக கோபம் இல்லை என்றாலும் பேஷன் ஸ்டுடியோ சுதன் மிகவும் கோபத்தில் இருக்கிறாராம். ஏனெனில் சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுப்பதாக சொல்லி தியேட்டர் அல்லாத மற்ற வியாபாரங்களை டீல் செய்திருக்கிறார். குறிப்பாக அந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை 50 கோடிக்கு விலை பேசியிருந்தார். மேலும் சில பைனான்சியர்களிடம் சில கோடிகள் கடனும் வாங்கியிருந்தார் என்கிறார்கல்.
அதோடு, விஜயை வைத்து ஜனநாயகன் படத்தை தயாரித்துள்ள கே.வி.என் புரடெக்ஷன் நிறுவனத்திடம் பணம் வாங்கி அந்த படத்தை எடுப்பதாகவும் திட்டமிட்டார். ஆனால் அங்கும் அவருக்கு பணம் கிடைக்கவில்லை. தற்போது சிபி சக்கரவர்த்தி ரஜினி படத்துக்கு சென்று விட்டதால் சிவகார்த்திகேயன் படம் தொடர்பான வியாபாரங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே சிபிச் சக்ரவர்த்தி மீது அவர் கடுமையான கோபத்தில் இருப்பதாக செய்திகள் கசிந்திருக்கிறது.
