டீ விற்பேனா ரிக்‌ஷா ஓட்டுவேனா தெரியாது!... 25 வருடங்களுக்கு முன்பு பசுபதி பேசிய வீடியோ...

by சிவா |   ( Updated:2021-09-23 11:23:11  )
pasupathi
X

தமிழ் சினிமாவில் டெராரான லுக்கில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் பசுபதி. நாசர் இயக்கிய மாயான் படத்தில் அறிமுகமனார். இவர் தியேட்டர் என அழைக்கப்படும் நடிப்பு பயிற்சி களமான கூத்துப்பட்டறையில் பல வருடம் பயிற்சி பெற்றவர்.

pasupathi3

தரணி இயக்கத்தில் விக்ரம் நடித்த தூள் படத்தில் டெரர் வில்லனாக அசத்தியவர். அதன்பின் அதுபோன்ற வேடங்களிலேயே அவர் நடித்து வந்தார். சுள்ளான், விருமாண்டி உள்பட பல படங்களில் டெரரான வில்லனாக நடித்தார். வில்லகுணச்சித்திரம், காமெடி என அனைத்திலும் கலக்கினார்.

pasupathi2

சமீபத்தில் ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ரங்கன் வாத்தியாராக அசத்தியிருந்தார். இவர் ஆர்யாவின் சைக்கிள் அமர்ந்து செல்லும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பல மீம்ஸ்களாக வெளிவந்து வைரலாகியது.

pasupathi5

இந்நிலையில், 25 வருடங்களுக்கு முன்பு ஒரு செய்தியாளர் சந்திப்பில் ‘இந்த தியேட்டரில் 15 பேர் இருக்கிறோம். எங்களின் எதிர்காலம் என்னவாகும் என எங்களுக்கு தெரியாது. நான் டீ விற்பேனா.. ரிக்‌ஷா ஓட்டுவேனா எனக்கு தெரியாது. மற்ற நடிகர்கள் போல் எங்களால் சம்பாதிக்க முடியுமா தெரியாது’ என அவர் பேசும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அவர் அப்போது அப்படி பேசியிருந்தாலும் அதன்பின் சினிமாவில் நுழைந்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

Next Story