
Cinema News
வயசானாலும் சிங்கம் தான்.! தளபதியின் பிரமாண்ட சாதனையை 3 நாளில் காலி செய்த ஆண்டவர் கமல்.!
உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் தற்போது ஏகபோக எதிர்பார்ப்புகளுடன் வரும் ஜூலை 3ஆம் தேதி வெளியாக உள்ள திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம் என பலர் நடித்துள்ளனர்.
இந்த திரைப்படத்தை கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். கமல்ஹாசன் தனது ராஜ்கமல் நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இன்று இப்படத்தின் பாடல்கள் வெளியாக உள்ள நிலையில், சில தினங்களுக்கு முன்னர் விக்ரம் படத்தில் இருந்து முதல் பாடலான பத்தல பத்தல எனும் பாடல் வெளியானது. அந்த பாடலை கமல்ஹாசன் எழுதி பாடியிருந்தார்.
நீண்ட வருடங்கள் கழித்து ஒரு பக்கா லோக்கல் பாட்டு கமல்ஹாசன் பாடியிருந்தார். அது பலரையும் ஆச்சரியபடுத்தியது. மேலும், பாடல ரசிக்கும்படி இருப்பதன் காரணமாக யூடியூபே மில்லியன் ரெக்கார்டுகளை அடித்து நொறுக்கி வருகிறது.
இதையும் படியுங்களேன் – இந்த சம்பவம் இன்று நடக்குமா? ஏக்கத்தில் அந்த வைரல் புகைப்படத்தை ஷேர் செய்து வரும் ரசிகர்கள்…,
தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தில் இருந்து வெளியான அரபி குத்து எனும் பாடல் யூடியூப் இல் மூன்று நாட்களில் 16 மில்லியன்களை கடந்து சாதனை படைத்தது. தற்போது அந்த சாதனையை விக்ரம் படத்தில் இருந்து வெளியான பத்தல பத்தல பாடல் முறியடித்துள்ளது. 3 நாட்களில் மட்டும் 17 மில்லியன்களை கடந்து இப்பாடல் சாதனை படைத்து வருகிறது. வரும் காலங்களில் அரபிக் குத்து பாடலை பத்தல பத்தல பாடல் முந்தி விடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.