கவர்ச்சி மழையில் குளிப்பாட்டி விட்டார் தீபிகா படுகோனே....பதானை விமர்சித்த பயில்வான்
பெரும் சர்ச்சைக்குள்ளான பதான் படம் நேற்று ரிலீஸாகி உலகம் முழுவதும் பரபரப்பாக வெற்றி நடைபோட்டு வருகிறது. இந்தப்படத்தை யுடியூபர் பயில்வான் ரங்கநாதன் விமர்சித்துள்ளார். அதன் சுருக்கம் வருமாறு...
4 வருட இடைவெளிக்குப் பிறகு ஷாருக்கான் நடித்த படம். இங்கு அஜீத்தும், விஜயும் இணைந்து நடித்தால் எப்படி இருக்குமோ அதே போல ஷாருக்கானும், சல்மான்கானும் இணைந்து நடித்துள்ளனர்.
இன்டர்வெல்லுக்கு அப்புறம் தான் சல்மான்கான் வர்றாரு. அதுவும் அரை மணி நேரம் தான் வர்றாரு. 2 பேரும் சேர்ந்து ஒருத்தருக்கு ஒருத்தர் ஈகோ இல்லாம பின்னிருக்காங்க.
ஜோகர் என்ற ஒரு உளவு அமைப்பு. இதற்கு ரூல்ஸே கிடையாது. எல்லாத்தையும் தாண்டி இவங்க வேலை செய்வாங்க. அரசு, ராணுவ கட்டுப்பாடுகள் எதுவும் கிடையாது. ராணுவத்துக்கும் அவங்களுக்கும் உள்ள இலைமறைவு, காய்மறைவு விஷயங்கள் தான். அந்த அமைப்பைச் சேர்ந்தவர் ஷாருக்கான்.
இந்திய தேசப்பற்றாளர். ஓபனிங் சீன்லயே அடிச்சி துவம்சம் பண்ணி அப்படியே ரத்தம் ஒழுக முழங்கால் போட்டு நின்றிருப்பார் ஷாருக்கான். இந்தில பேசுவாரு கர்னல். தமிழ்...தமிழ்...தமிழ்ல பேசுன்னு சொல்ற அறிமுகக் கட்டத்துலயே ஷாருக்கானுக்கு விசில்...கைதட்டல் அனல் பறக்கிறது. தியேட்டர் இரண்டாகி விடுகிறது.
நம் இதயங்களைக் கொள்ளை அடித்துவிடுகிறார். அதே சமயத்துல விக்ரம் படம் மாதிரி தான். ஒரு விஷயத்தைக் கண்டுபிடிக்கப் போறாரு. அது என்னன்னா ரத்த வித்துன்னு பேரு. அது கீழே விழுந்துதுன்னா ஒண்ணு 100 ஆயிரும். அதைக் கண்டுபிடிக்க போறாங்க.
அதுல தீபிகா படுகோனேவும் ஒருவர். டிம்பிள்கபாடியாவுக்கு அருமையான கேரக்டர். ராணுவ அதிகாரியாக நடித்த வயதான மூதாட்டி. இனிமேல் காட்டறதுக்கு ஒண்ணுமில்லங்கற அளவுக்கு ரசிகர்களைக் கவர்ச்சி மழையில குளிப்பாட்டி விட்டார். இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் இந்தக் கவர்ச்சி.
ஷாருக்கானும், சல்மான்கானும் இந்திய தேசப்பற்றாளர்கள். கடைசியில் இருவர் கையைத் தூக்கிக் கொண்டு ஜெய்ஹிந்த் என்பார்கள். ஷாருக்கானின் பைட் செம சூப்பர்.
இதற்காக பலமுறை பார்ப்பார்கள். பரபர விறுவிறு திரைக்கதை. கதையோடு சேர்ந்த திருப்பங்கள் படத்தில் விறுவிறுப்பாக உள்ளன. இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஏற்படும் ஒரு கருத்து மோதல்.
அதிலிருந்து உருவாவது தான் இந்தப் படத்தின் கதை. இந்தியர்களின் ஒற்றுமை வலிமையானது என்பதை எடுத்துக்காட்டியுள்ள படம். துபாய், துருக்கியில் எடுக்கப்பட்டுள்ளது.