பார்த்திபனை டென்ஷனாக்கிய சிவாஜி.. நடிக்கனுமா வேண்டாமானு முடிவு பண்ணிக்கோ....!
சினிமாவில் வார்த்தையில் வில்வித்தை விளையாடும் நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் பார்த்திபன். இவர் இயக்குனர் கே. பாக்கியராஜிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர். ஆரம்பத்தில் சின்ன ரோல்களில் நடித்து வந்த பார்த்திபன் பாக்யராஜ் இயக்கி நடித்த தாவணி கனவுகள் படத்தின் மூலம் தான் தான் ஒரு நடிகர் என அனைவரையும் உணர வைத்தார்.
மேலும் அந்த படத்தில் 3 மாப்பிள்ளைகளில் ஒருவராக பார்த்திபன் வருவார். அதுவும் போஸ்ட் மாஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். முதலில் இந்த கதாபாத்திரத்திற்கு ஆள்களை தேடிக் கொண்டிருந்த நிலையில் பார்த்திபன் மிகவும் எதிர்பார்ப்புடன் தான் நடித்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் முன்னதாகவே போஸ்ட் மாஸ்டருக்கு தேவையான ஆடைகளையும் தயார் நிலையில் வைத்திருந்தாராம்.
நீண்ட யோசனைக்கு பிறகே பாக்யராஜ் பார்த்திபனை நடிக்க வைத்தார். இதை அறிந்த சிவாஜிகணேசன் இவரும் அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். உடனே சிவாஜி பார்த்திபனை அழைத்து “ தம்பி இந்த வசனம் நீண்ட வசனமாக இருக்கு. நான் என் வாயில் இரத்தமும் வைத்துள்ளேன். நீ வசனத்தை சொன்னதும் என் வாயிலிருந்து இரத்தமா வரும். இதில் நீ எங்கேயாவது வசனத்தை தவறவிட்டால் வாயில் ரொம்ப நேரம் நிற்காது.
வடிந்து விடும். மீண்டும் ஆடைகள் எல்லாம் அழுக்காகி விடும்.மறுபடியும் எல்லாவற்றையும் சுத்தம் செய்து சூட்டிங் எடுக்கிறதுக்கு உள்ள அன்னைக்கு நாளே ஓடிடும். அதுவும் போக உன் இயக்குனர் தான் இந்த படத்தை தயாரிக்க போறான். அதனால் நீ நடிக்கனுமா வேஎண்டாமானு முடிவு பண்ணிக்கோனு” பார்த்திபனை டென்ஷனாக்கி விட்டாராம். ஏற்கெனவே ஹீரோவாக வேண்டும் என்ற கனவில் வந்த பார்த்திபன் துணை இயக்குனராக தான் பணி புரிந்தார். இந்த நிலைமையில் இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தும் சிவாஜி மேலும் இவரை டென்ஷனாக்கிய சம்பவம் பார்த்திபனை இன்னும் தூண்டுகோலாக்கியதாம். பாக்கியராஜும் சிவாஜி முன்னாடி கேவல படுத்திவிடாதே என்று கூறினாராம். ஆனால் அற்புதமாக அந்த வசனத்தை பேசி சிவாஜியிடம் பாராட்டையும் பெற்றாராம் பார்த்திபன்.