களைகட்ட போகுது ‘பத்து தல’ ஆடியோ லாஞ்சு.. சிறப்பு விருந்தினராக விக்ரம் பாணியில் மிரட்ட வரும் நடிகர்!..

by Rohini |   ( Updated:2023-03-01 15:24:31  )
simbu
X

simbu

சிம்புவின் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் படம் ‘பத்து தல’. ஆனால் இந்த படத்தில் முதலில் கௌதம் கார்த்திக் தான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறினார்கள். ஆனால் கதையில் சில பல மாற்றங்கள் செய்ததின் மூலம் சிம்பு இந்தப் படத்திற்குள் வந்தார்.

simbu1

simbu1

ஆனாலும் கௌதம் கார்த்திக்கிற்கு இந்தப் படம் முக்கிய திருப்பு முனையாக இருக்கும் என்பதால் அவரின் எதிர்காலத்தை பாதிக்காத வகையில் சில விஷயங்களை சிம்பு விட்டுக் கொடுத்திருப்பதாக தெரிகிறது. படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’ திரைப்படத்தின் இயக்குனரான என்.கிருஷ்ணா தான் இயக்கியிருக்கிறார்.

ஸ்டூடியோ கீரின் இந்தப் படத்தை தயாரிக்கிறது. படப்பிடிப்பு எல்லாம் முடிந்து இப்போது டப்பிங் வேலைகள் போய்க் கொண்டிருக்கின்றன. தற்போது சிம்பு பாங்காங்கில் இருப்பதால் அங்கு இருந்தே டப்பிங் பணிகளை செய்தாராம் சிம்பு.

simbu2

simbu2

இந்த நிலையில் படத்தின் ஆடியோ லாஞ்ச் இந்த மாதம் 18 ஆம் தேதி நேரு ஸ்டேடியத்தில் நடக்க இருக்கிறதாம். அதற்கு முன்னதாக படத்தின் டீஸர் வருகிற 3 ஆம் தேதி வெளியிட இருக்கிறார்கள். ஆடியோ லாஞ்சை கோலாகலமாக கொண்டாட சிறப்பு விருந்தினரை வரவழைக்க ஸ்டூடியோ கிரீன் உரிமையாளரான ஞானவேல் ராஜா முடிவு செய்திருக்கிறாராம்.

அதுவும் சூர்யாவை வரவழைக்க ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறதாம். கண்டிப்பாக அவர் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். ஒரு பக்கம் ஞானவேல் ராஜா சூர்யாவிற்கு உறவினர் என்பதால் வருவதற்கு வாய்ப்புகள் இருந்தாலும் சூர்யா தற்போது சிறுத்தை சிவாவின் புதிய படத்தில் மாறுபட்ட கெட்டப்பில் நடித்துக் கொண்டிருப்பதால் எப்படி வெளியே வருவார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

simbu2

surya

அதே நேரம் நடிகர் விக்ரம் எப்படி தன் கெட்டப் வெளியே தெரியாத அளவில் கர்சீஃப் வைத்து மறைத்துக் கொண்டு வருவாரோ அப்படி வந்தாலும் ஆச்சரியமில்லை, ஆனால் அவர் வந்தே தீருவார் என்று கூறிவருகிறார்கள்.

இதையும் படிங்க : இப்படி ஒரு வயித்தெறிச்சலா?.. குக் வித் கோமாளி மணிமேகலை வெளியேற காரணமாக இருந்த சம்பவம்!..

Next Story