பாட்டுக்கு பாட்டு எடுக்க வா...பட்டத்து ராணி படிக்க வா... பாக்களில் தொடங்கும் படங்களின் பார்வை
தமிழ்சினிமாவில் பாட்டு என்றாலே ஒரு பரவசம் தான். ஆரம்ப காலத்தில் நாம் தாலாட்டுக்கு அடிமையானோம். எதற்கெடுத்தாலும் ஒரு பாட்டு நம் வாழ்வுடனே ஒட்டிக் கொண்டு வருவதுண்டு. அப்படியிருக்கையில் தமிழ்சினிமா மட்டும் என்ன விதிவிலக்கா?
பாட்டுக்கு பாட்டு எடுக்க வா என்ற தோரணையில் பாட்டு என்று தொடங்கும் விதத்தில் மட்டுமின்றி முடியும் விதத்திலும் படங்கள் மளமளவென வந்த வண்ணம் இருந்தன. அவற்றை ஒரு சேர பார்ப்பது என்றால் எல்லோருக்கும் கொள்ளை பிரியம் தான். உங்கள் ஆசையைப் பூர்த்தி செய்கிறது இந்த பட்டியல். வாங்க பார்க்கலாம்.
பாட்டுக்கு நான் அடிமை
1990ல் வெளியான படம். சண்முகப்பிரியன் இயக்கிய படம். ராமராஜன், ரேகா, குஷ்பூ, ரவிச்சந்திரன் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர். தாலாட்டு கேட்காத ஆள், பூவே பூவே, கண்ணம்மா...கெட்டாலும் சேரு, புள்ளி வச்ச, யார் பாடும் பாடல், பாட்டுக்கு ஜோடியா, அத்தி மரக்கிளி ஆகிய பாடல்கள் உள்ளன.
புதுப்பாட்டு
1990ல் வெளியான படம் புதுப்பாட்டு. இளையராஜா தயாரித்து இசை அமைத்த படம். ராமராஜன், வைதேகி, சுமா, ராஜீவ், கவுண்டமணி, செந்தில் உள்பட பலர் நடித்துள்ளனர். எங்க ஊரு காதல, பூமியே எங்க, நேத்து ஒருத்தர ஒருத்தர, சொந்தம் வந்தது, தவமா தவமிருந்து, வெத்தல பாக்கு ஆகிய பாடல்கள் உள்ளன.
பாட்டுப் பாடவா
1995ல் வெளியான படம். பி.ஆர்.விஜயலட்சுமி இயக்கிய இந்தப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். எஸ்.பி.பாலசுப்பிரமணியம், ரகுமான், லாவண்யா, ஜனகராஜ், கல்யாண் குமார், மோகன் நடராஜன், சின்னி ஜெயந்த், ஸ்ரீவித்யா உள்பட பலர் நடித்தள்ளனர். சின்னகண்மணிக்குள்ளே வந்த, வழிவிடு வழிவிடு வழிவிடு, பூங்காற்றிலே ஒரு, நில் நில் நில், அட வா வா, இனிய கானம், பாடுறா உள்பட பல பாடல்கள் உள்ளன.
நாட்டுப்புறப்பாட்டு
1996ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் கஸ்தூரி ராஜா. செல்வா, சிவகுமார், குஷ்பூ, மணிவண்ணன், கவுண்டமணி, செந்தில், குமரிமுத்து, வினுசக்கரவர்த்தி, பிரேம், அனுஷா உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் சூப்பர். ஒத்த ரூவா தாரேன், கொக்கி வச்சேன், கெழக்கால, சட்டி பொட்டி, நாட்டுப்புறப் பாட்டு ஒண்ணு ஆகிய பாடல்கள் உள்ளன.
செந்தமிழ்ப்பாட்டு
1992ல் வெளியான படம் செந்தமிழ்ப்பாட்டு. பி.வாசு இயக்கிய இப்படம் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. பிரபு, சுகன்யா உள்பட பலர் நடித்துள்ளனர். விஸ்வநாதன் - இளையராஜா இணைந்து இசை அமைத்துள்ள படம் இது. பாடல்கள் அனைத்தும் சூப்பர். வண்ண வண்ண, அடி கோமாதா, சின்ன சின்ன தூறல், இந்த, கூட்டுக்கொரு, காலையில் கேட்டது ஆகிய பாடல்கள் உள்ளன.
கும்மிப்பாட்டு
1999ல் வெளியான படம் கும்மிப்பாட்டு. கஸ்தூpரி ராஜா இயக்கிய படம். பிரபு, தேவயாணி, ராதிகா, சிவகுமார், ரஞ்சித், மனோரமா, வடிவேலு, ஆனந்த்ராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். உச்சி வெயிலுக்கு, சமஞ்ச புள்ள, ஊருக்கு, அம்மியல அரச்சு, ஆசை மச்சான், சின்ன மனசு, அடி பூங்குயிலே ஆகிய பாடல்கள் உள்ளன.
வண்ணத்தமிழ் பாட்டு
2000ல் வெளியான இந்தப்படத்தை இயக்கியவர் பி.வாசு. பிரபு, வைஜெயந்தி, மணிசந்தனா, ஆனந்தராஜ், ராதாரவி, வடிவேலு உள்பட பலர் நடித்துள்ளனர். என்ன சொல்லி போடுவேன், காட்டுக்குயில் போல, நிலவில் நீ, வண்ண கதவுகள், வெளிச்சம் அடிக்குதடி, விளையாட்டு விளையாட்டு ஆகிய பாடல்கள் உள்ளன.