பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் செய்த வேலை!.. மாடர்ன் தியேட்டர்ஸில் மாறிய நடைமுறை!..

by சிவா |   ( Updated:2023-04-18 06:51:57  )
msv
X

msv

சில எழுத்தாளர்கள், கவிஞர்கள் மற்றும் பாடலாசிரியர்கள் எப்போதும் சுயமரியாதை மிக்கவர்களாக இருப்பார்கள். அவர்களின் சுயத்தை தொட்டால் பொங்கி எழுந்து விடுவார்கள். சினிமாவில் வரும் வாய்ப்புகளை விட, அதில் கிடைக்கும் பணத்தை விட கௌரவமும், சுயமரியாதையும் முக்கியம் என நினைப்பார்கள். இதற்கான பல உதாரணங்கள் திரையுலகில் நடந்துள்ளது.

தமிழ் திரையுலகில் பல அர்த்தமுள்ள, கருத்தான பாடல்களை எழுதியவர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம். சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா, தூங்காதே தம்பி தூங்காதே என சிறுவர்களுக்கு அறிவுரை சொல்லி பல பாடல்களை எழுதி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர்.

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களை தயாரித்த நிறுவனம் மாடர்ன் தியேட்டர்ஸ். இதன் நிறுவனர் சுந்தரம். ஒருமுறை பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரமும், இசையைமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனும் மாடர்ன் தியேட்டர்ஸ் சுந்தரத்தை பார்க்க சென்றனர். வழக்கமாக சுந்தரம் அமர்ந்திருக்கும் அறையில் ஒரு ஒரு சேர் மட்டும் இருக்கும். அதில், அவர் மட்டுமே அமர்ந்து பேசுவார். அவரை பார்க்க செல்வோர் நின்று கொண்டுதான் பேசுவார்கள்.

கல்யான சுந்தரமும், எம்.எஸ்.வியும் சென்ற போது அதேபோல் சுந்தரம் அமர்ந்திருந்தார். அப்போது கல்யாண சுந்தரம் தன் பாக்கெட்டில் இருந்து ஒரு சீட்டை எடுத்து எதையோ எழுதி சுந்தரத்திடம் கொடுக்க, அதை வாங்கி பார்த்த சுந்தரம் அங்கிருந்த உதவியாளர்களிடம் இரண்டு சேரை கொண்டு வந்து போட சொல்லியிருக்கிறார். அதன்பின் கல்யாண சுந்தரமும், எம்.எஸ்.வியும் அதில் அமர்ந்து அவரிடம் பேசிவிட்டு வெளியே வந்துள்ளனர்.

அந்த சீட்டில் என்ன எழுதி கொடுத்தீங்க என எம்.எஸ்.வி கேட்க ‘நீங்க உட்கார்ந்து பேசிக்கிட்டு இருக்கீங்க. நாங்க நின்னுக்கிட்டு இருக்கோம். எங்களுக்கும் சேர் கொண்டு வர சொல்லுங்க’ என எழுதியிருந்தேன்’ என சொன்னாராம் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.

அந்த அந்த இரண்டு இருக்கைகளும் அதே இடத்தில் இருந்துள்ளது. சுந்தரத்தை பார்க்க யார் சென்றாலும் அதில் அமர்ந்து பேசியுள்ளனர். கல்யாண சுந்தரம் தனது சுயமாரியாதையால் மாடர்ன் தியேட்டர்ஸ் நடைமுறையையே மாற்றியுள்ளார்.

Next Story