அமீர் கொடுத்த அந்த முத்தம் சரியா?... இப்படி சொல்லிட்டாரே பவானி...
தெலுங்கில் சில சீரியல்களிலும், தமிழில் ரெட்டை வால் குருவி, பாசமலர், தவனை முறை வாழ்க்கை, சின்ன தம்பி, ராசாத்தி, அன்பே சிவம் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமானவர் பவானி ரெட்டி.
பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்துள்ளார். தன்னுடைய 21 வயதில் மாடலாக தனது வாழ்க்கைத் துவங்கினார் பவானி. தெலுங்கு நடிகர் பிரதீப் குமாரை திருமணம் செய்து கொண்டார். ஆனால், சில காரணங்களால் பிரதீப் குமார் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டார். அதன்பின் பவானி ரெட்டி சீரியல்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அதோடு, அவர் 2வது திருமணம் செய்து கொண்டதாகவும் சிலர் செய்தி வெளியிட்டனர். அதை அவர் மறுத்தார்.
இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்த போது அமீர் அவரின் கன்னத்தில் திடீரென முத்தம் கொடுத்தார். ஆனால், பவானி இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களில் கிண்டலடிக்கப்பட்டு மீம்ஸ்களாக வெளி வந்தது.
இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள பவானி ‘அமீர் எனக்கு கொடுத்த முத்தத்தில் தவறு ஏதுமில்லை. அவன் என்னை விட சின்னப் பையன். அவனை தம்பி என்றுதான் அழைத்தேன். ஆனால், அப்படி அழைக்க வேண்டாம் என கூறிவிட்டான். நான் நிரூப்புக்கு முத்தம் கொடுத்தேன். அது தவறு இல்லை எனில் அமீர் கொடுத்த முத்தத்திலும் தவறு இல்லை’ என பவானி கூறியுள்ளார்.